சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப் பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. குடும்பத்தில் சுபீட்சம் நிலவிடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .

‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை 
மனதில் நினைத்துக்கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமா பாதங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்துவிடும் .. அஷ்டாக்ஷ்ரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும் .. 

’ஓம்’ என்பது ஓரெழுத்தாகவும் ..’ நம’ என்பது இரெண்டெழுத்தாகவும் .. ‘நாராயணாய’ என்பது ஐந்தெழுத்தாகவும் ஆகமொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து ‘நாராயண அஷ்டாக்ஷ்ரம்’ எனப்படும் .. இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும் .. எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும் .. துன்பங்கள் தொடராது .. முகவசீகரம் கிட்டும் .. 

காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான் ..
மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான் ..
உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவிதமான மகாபாதங்கள் .. உபபாதங்களிலிருந்து விடுபடுகிறான் .. எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான் .. 

மேற்கூறிய அனைத்தும் ‘நாராயண உபநிஷத்தில் உள்ளவை’ 
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் அவரது திருவருளையும் 
அருட்கடாக்ஷத்தையும் பெற்றிடுவோம் .. 
“ ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU 
MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS .. AND HAPPINESS .. 'OM NAMO NAARAAYANAAYA '


Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

No comments:

Post a Comment