PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பௌர்ணமிகளிலே சிறப்புமிக்க “ சித்ரா பௌர்ணமி தினமாகும் “ பூமியைச் சுற்றிவரும் சந்திரன் இன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார் .. அதாவது இன்றைய தினத்தின் சந்திரன் ஒளி (பூரணகலை) மற்ற பௌர்ணமிகளை விட பொலிவாக இருக்கும் .. மலைக்கோவில்களுக்கு சென்று கிரிவலம் வருதல் சிறப்பு .. மேலும் இந்தநாளானது சித்திரகுப்தனின் அவதாரத் திருநாளாகும் .. சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று அன்னை பார்வதிதேவி தன் கைத்திறமையால் அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தார் .. அந்த ஓவியம் சாதாரண ஓவியமாக இல்லாமல் நிஜகுழந்தைபோல் தத்ரூபமாக இருந்ததைக் கண்ட சிவபெருமான் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறிக் கொண்டே அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சுக்காற்றை அந்த ஓவியத்தின்மேல் பதித்தார் ஈசனின் மூச்சுக்காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டவுடன் அந்த ஓவியக் குழந்தை உயிர்பெற்று சிரிக்க ஆரம்பித்தது .. மகிழ்ச்சி அடைந்த பார்வதிதேவி இக்குழந்தை சித்திரகுப்தன் என அழைக்கப்படட்டும் என்று ஆசி வழங்கினார் சித்திரகுப்தன் பாவ.. புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமது சொர்க்க .. நரகத்தையும் .. அடுத்தபிறவியையும் முடிவு செய்பவர் .. எனவே கிரிவலம் வந்து இறைவனை வழிபடும் அதேவேளையில் சித்திரகுப்தனையும் மனதில் நினைந்து இப்பிறவியும் .. அடுத்தபிறவியும் நல்லபிறவிகளாக அமையும்படி பிரார்த்திக்கவேண்டும் .. மந்திரம் - சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் ! லேகணீபத்ர தாரிணம் ! சித்திர ரத்னாம் பரதரம் ! மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம் !! பொருள் - சிறந்த அறிவும் .. ஞானமும் கொண்டவரும் .. எழுத்தாணி .. ஏடு .. ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும் .. அழகிய ரத்தினத்தாலான உடையை அணிந்திருப்பவரும் .. எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குபரான சித்திரகுப்தரே ! நமஸ்காரம் ! அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபடுவதும் விசேஷம் .. இன்று அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது .. பரிபூரண விரதமிருந்து அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபீட்சம் பெருகும் .. பெண்களுக்கு பன்மடங்கு நலந்தரக்கூடியது .. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யபாக்கியம் நிலைக்க இன்று விரதமிருந்து அம்பாளை வழிபடுவார்கள் .. அம்பாளைப் போற்றுவோம் சகல சௌபாக்கியங்களும் .. லக்ஷ்மிகடாக்ஷ்மும் பெற்றிடுவோம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING AND BEST WISHES FOR THE CHITHRA PAURNAMI DAY .. MAY GODDESS LAXMI BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI "

No comments:

Post a Comment