அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருவதால் விஷ்ணு ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பது சாலச் சிறந்தது .. இன்றைய நாள் தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. சகல யோகங்களையும் அள்ளித்தரும் நாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
தேய்பிறையில் வரும் ஏகாதசி திதிக்கு ‘ யோகிணி ஏகாதசி ‘
என்று பெயர் .. இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு பலவித யோகங்கள் உண்டாவதால் யோகிணி ஏகாதசி என்று அழைப்பர் ..
எடுத்தபணியை சிரத்தையுடனும் .. கவனத்துடனும் செய்யவேண்டும் .. பூஜை முதலான தெய்வகாரியங்களில்
சோம்பேறித்தனத்தையும் .. அக்கறையின்மையும்
விட்டு .. விட்டு .. மனதில் எப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் சதாசர்வகாலமும் ஈஸ்வர சிந்தனையுடன் இருக்கவேண்டும் ..
கலியுகத்தில் கர்மவினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய ரோகங்களிருந்து விடுபட “யோகிணி ஏகாதசி” அன்று பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமஸ்மரணையுடன் உபவாசம் இருந்து விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ..
பகவானைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தையும் .. திருவருளையும் பெற்றிடுவோமாக ! ..
ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ!
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" EKADASI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..
MAY THE DIVINE BLESSINGS OF LORD VISHNU BRING YOU ETERNAL BLISS OF HAPPINESS AND GOOD HEALTH ..
" OM NAMO NAARAAYANAA " ..
No comments:
Post a Comment