PANVEL BALGAN PATHAM POTRI....SWAMIYE SARANAM IYYAPPA....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவுக்கு உகந்த 
‘ சயன ஏகாதசி ‘ விரதமும் வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றி பெறவும் பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசி விரதத்தை “ தேவசயனி’ .. அல்லது ”விஷ்ணு சயனி” .. என்பர் .. இன்றைய நாள் பகவான் விஷ்ணுவும் மற்றும் அனைத்து தேவர்களும் சயனிக்கும் நாள் 
நித்திரையில் ஆழ்ந்து போகும் தினமாகும் .. இந்நாளுக்குப் பிறகு தேவாப்தானி ஏகாதசி (ஹரிபோதினி) (பிரபோதினி) (தேவோத்தான்) (உத்தான ஏகாதசி) கார்த்திகை (அக்டோபர்- நவம்பர்) மாதத்தில் வரும் ஏகாதசி வரை எந்தவிதமான சுபச்சடங்குகளையும் செய்யக்கூடாது என்று கூறுவர் .. 

சூரியபகவான் தன் தென்திசை கோள்சார பிரயாணத்தை (தட்சிணாயனம்) தொடங்குவதாலும் .. தேவர்கள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருப்பதாலும் அவர்களை வேள்வியின் ஆகுதிகளை ஏற்றுக்கொள்ள அழைக்க இயலாது .. 

இன்றைய ஏகாதசி நன்னாளில் உபவாசமிருந்து விரதத்தைக் கடைப்பிடிப்போரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதோடு அல்லாமல் அவரது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப்பெறுவர் .. 

நாம் நம்முடைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மற்றவர்களுக்கு வார்த்தைகளாலோ .. செயல்களினாலோ துன்பம் விளைவிக்கக் கூடாது .. 
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! 
ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" DEVSHAYANI EKADASHI " .. MAY LORD VISHNU REMOVE ALL THE OBSTACLES THAT STAND IN YOUR SPIRITUAL AND EARTHLY LIFE .. 
" OM NAMO NAARAAYANAA " .. 

ACCORDING TO HINDU MYTHOLOGY .. IT IS BELIEVED THAT 
LORD VISHNU FALLS ASLEEP ON THIS DAY OF ' DEVSHAYANI EKADASHI' .. IN KSHEERA SAGAR ( OCEAN OF MILK ) .. VISHNU AWAKENS FROM HIS SLEEP AFTER A PERIOD OF FOUR MONTHS ON THE DAY OF PRABHODINI EKADASHI .. HIS SLEEPING PERIOD IS KNOWN AS CHATURMAS ( 4 MONTHS ) .. 

OBSERVE THE DAY OF DEVSHAYANI EKADASHI AND LEAD A CHARMING LIFE IN THE NEAR FUTURE .. PURIFY YOUR HEART NOT WITH WATER OR ELIXIR .. BUT WITH DEVOTE HEART FULL OF DEDICATION TOWARDS LORD VISHNU .. 
" JAI NAARAAYANAA " ..

No comments:

Post a Comment