SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று மூன்றாம் ஆடிவெள்ளியும் .. பௌர்ணமியும் சேர்ந்து வருவது அதிவிசேஷம் .. அம்மனைப் பூஜிக்க சிறந்த நாளாகும் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று நிறைந்த செல்வம் இல்லம் தேடிவரப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

ஆடியில் அம்மன்கோயில்களில் மஞ்சள் .. குங்குமத்துடன் .. கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர் .. இந்நாட்களில் ஒருசில குடும்பங்களில் சகோதரர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பதுடன் .. அவர்களை அம்மனாகக் கருதி மஞ்சள் .. குங்குமம் .. வளையல்களுடன் .. புடவைகளையும் அளித்து மகிழ்கின்றனர் .. தம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அப்பகுதி மக்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்குகின்றனர் .. 

ஆடிமாதத்து பௌர்ணமி நாளை “ குருபூர்ணிமா “ அல்லது “வியாச ஜெயந்தி” என்று அழைப்பார்கள் .. மஹாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் .. வியாசர் வேதங்களை 
ரிக் .. யஜுர் .. சாமம் .. அதர்வணம் என்று நான்காக வகுத்தவர் ..
வியாசரை குருபூர்ணிமா தினமான இன்று நினைந்து வணங்கவேண்டும் .. சீடர்களும் .. ஆன்மீக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச்சென்று வணங்கி குருவருள் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் .. புதிய சீடர்கள் குருதீட்சையைப் பெறுவர் .. 

குருவருளும் .. திருவருளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோமாக .. “ குருவே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ON THIS ' GURU PURNIMA ' DAY .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment