PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய பிரதோஷ விரதமும் சேர்ந்துவருவதால் மாலையில் பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையிலான வேளையில் ஆலயம் சென்று சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாளில் தங்களனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் .. பரமசிவனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத் !! பிரதோஷ விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவவிரதங்களில் ஒன்று .. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை .. தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் .. பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானைக்குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும் .. நோய்களின் துயர்மடிய பிரதோஷவழிபாடு சிறந்தது .. பிரதோஷவேளையில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை) பரமசிவனையும் ..நந்தீஸ்வரரையும் வணங்கி வழிபட்டால் மற்றநாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை ..பிரதோஷ விரதம் அனுஷ்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷவேளையாகிய சூரிய அஸ்தமனத்தின்போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்தபின் போசனம் செய்தல் வேண்டும் .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்திய சிவபெருமானைப் போற்றிடுவோம் ! அனைத்து தோஷங்களிலும் இருந்தும் நிவர்த்தி பெறுவோமாக! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY AND MAY LORD SHIVA BLESS YOU ON THIS " PRADOSHA DAY " WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..swamiye saranam iyyappa

No comments:

Post a Comment