மஹாபலி சக்ரவர்த்தி தான் ஆண்ட பூமியை காண வரும் நாளாக (திரு)ஓணம் பண்டிகை மலையாளிகளால் கொண்டாடப் படுகிறது .. அவரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டு பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள் கேரள நாட்டினர். அத்தப்பூ என்பதன் பொருள்:- ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து சித்திரை,ஸ்வாதி,விஸாகம்,அநுஷம்,கேட்டை,மூலம்,பூராடம், உத்ராடம்,திருவோணம் வரை பத்து நாட்கள் பல வண்ண பூக்களால் கோலமிட்டு வரவேற்கிறார்கள்..ஹஸ்தம் என்பதையே அத்தம் என்று சொல்வது அவர்களின் சொலவடை.. இதுவே அத்தப்பூ கோலம் என ஆயிற்று..இன்று மஹாபலி வருகிறார்..கோலாகல வரவேற்பிற்கு மலையாளிகள் தயாராக ஜாதி "மத" பாகுபாடின்றி புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட உள்ளார்கள்... HAPPY ONAM..

No comments:

Post a Comment