Swamiye Saranam Iyyappa,.....Guruve Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த ஆவணி மூலம் அனுஷ்டிக்கும் நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஆவணிமூலம் என்பது ஆவணி மாதத்து மூலநட்சத்திரத்திலே 
சிவபெருமானைப்போற்றி எடுக்கப்படும் விழாவாகும் .. ஆவணி மூல நாளிலே .. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் பெருமான் திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும் ..
செம்மணச் செல்விக்கான வரம்புப்பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிப்பட்ட திருவிளையாடலே ஆவணி மூலத்திற்குரியது
மதுரையிலே இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகின்றது .. பிட்டுத்திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர் .. சுந்தரேசர் பொற்கூடையுடனும் ..
பொன்மண்வெட்டியுடனும் .. இந்தவிழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவார் ..
சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்திலே ஆகும் ..
தென்னாடுடைய சிவமே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இன்று காலையில் சூரியன் உதயமாகும்போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால் அந்த ஆண்டுமுழுவதுமே வெய்யில் கடுமையாக இருக்கும் .. மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோஷணம் காணப்படும் .. சுந்தரேஸ்வரப் பெருமானுக்கு பட்டம் சூட்டி அவரது கருணையால் சீதோஷணம் நல்லபடியாக இருக்கவேண்டும் என வேண்டி .. மழைவளமும் .. நன்றாக இருக்க ஆவணி மூலத்தன்று சிறந்த சீதோஷணம் கிடைக்க பிரார்த்திப்போமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI BHOLE NATH "..
AAVANI MOOLAM FESTIVAL IS DEDICATED TO LORD SHIVA .. THE MOST IMPORTANT FESTIVAL AND RITUALS ARE HELD TODAY AT THE MADURAI MEENAKSHI TEMPLE .. THE FESTIVAL IS BASICALLY DEDICATED TO THE REENACTMENT OF A FAMOUS INCIDENT INVOLVING LORD SHIVA .. ALSO KNOWN AS PUTTU FESTIVAL .. AND AN IMPORTANT LEGEND IN WHICH LORD SHIVA SENDS HIS GANAS AS HORSES TO KEEP THE PROMISE OF SAINT MANIKKAVASAGAR IS BELIEVED TO HAVE HAPPENNED ON THIS AAVANI MOOLAM DAY .. 
" OM NAMASHIVAAYA

No comments:

Post a Comment