Swamiye sarnam iyyappa......guruve saranam அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிச்செவ்வாய் நான்காம் வாரமுமாகிய இன்று அன்னை துர்க்காதேவியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிமிகு நன்னாளாக அமைந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராண்யை வித்மஹே ! துர்க்காயை தீமஹி ! தந்நோ கௌரீ ப்ரசோதயாத் !! ஆடி மாதம் பிறந்துவிட்டால் காற்று அடிக்குமோ அடிக்காதோ .. அம்மன் கோயில்களில் எல்லாம் தீச்சட்டி .. முளைப்பாரி .. தீமிதித்தல் .. வீதி உலா .. என பக்தி களைகட்டிவிடும் .. தெய்வீகமணம் கமழும் மாதமாக ஆடிமாதம் திகழ்கிறது .. அம்மன் .. அம்பாள் .. சக்தி .. ஸ்தலங்களில் மிகவும் சிறப்புவாய்ந்ததாக பூஜைகள் .. ஹோமங்கள் .. உற்சவங்கள் .. அபிஷேகங்கள் .. பூச்சொரிதல் .. போன்றவை விமரிசையாக நடக்கும் .. ஆடி ஞாயிறு .. செவ்வாய் .. வெள்ளி மிகவும் சிறப்புமிக்கவை .. கோயில்களில் மட்டுமன்றி வீடுகளிலும் விரதம் இருந்து வேப்பிலைதோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திகடன்களை நிறைவேற்றி .. கூழ் ஊற்றுவார்கள் .. இந்த ஆடிமாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்திகமழும் .. ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் .. அம்மன்பாடல்களைக் கேட்டோ .. படித்தோ அம்மனருளை பெற்றிடுவர் .. அன்னையைப் போற்றுவோம் ! அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று .. இல்லம்தோறும் மகிழ்ச்சிப் பொங்கப் பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA .. MAY HER COUNTLESS BLESSINGS ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH .. STRENGTH .. AND HAPPINESS .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment