பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹா சமாதி அடைந்து விட்டார்கள். இறைப் பணியோடு கல்விப் பணி, அறப் பணி என்று இவர் ஆற்றிய சேவை கணக்கில் அடங்கா. ரிஷிகேஷில் ஸ்வாமிகள் எடுக்கும் வகுப்புகளுக்குக் கூடும் அன்பர்கள் கூட்டத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அத்தனை ஆர்வமும் பக்தியும் அந்த வகுப்புக்கு வருபவர்கள் முகத்தில் தென்படும். எண்ணற்ற பிரபலங்கள் இந்த ரிஷிகேஷ் ஆசிரமத்துக்கு வந்து கங்கைக் கரையில் அமர்ந்து இறை சிந்தனையில் திளைப்பார்கள். இந்த மகானின் ஆசிகள் என்றென்றும் நம்முடன் விளங்க பிரார்த்திப்போம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
No comments:
Post a Comment