SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கு அதிபதியாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமே இன்று .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் உடல்நலமும் .. மனநலமும் புத்துணர்வுடன் திகழ்ந்திட கலியுகவரதனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 


முருகவழிபாட்டில் குறிப்பாக உருவவழிபாடு அதாவது வேல்வழிபாடு பழைமைவாய்ந்தது .. பண்டைய காலத்தில் வேலைவழிபட்டுவந்தவர்களைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு .. வேலைவழிபட்டுவந்தால் அனைத்து இடர்களும் விட்டுவிலகும் என்பதே ஐதீகம் .. இதனால்தான் நம் முன்னோர்கள் “ வேலுண்டு வினைதீர்க்க “ என்றும் கூறுவர் .. 

அருணகிரியாரின் திருப்புகழ் ஒரு எடுத்துக்காட்டு .. முருகனது புகழைப்பாடச்சற்றுத் தயங்கிய அருணகிரியாரின் நாவில் முருகன் தனது வேலின் நுணியில் “ ஓம் “ என்ற மந்திரத்தை 
எழுதி .. முருகனது அருளால் பாடவைக்கப்பட்டதுதான் திருப்புகழாகும் .. 

அத்தகைய சிறப்புமிக்க வேலையும் .. வேலனையும் துதித்து சகல நன்மைகளையும் பெறுவோமாக .. “ ஓம் முருகா “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH PROSPERITY .. AND HAPPINESS IN YOUR LIFE FOREVER .. " OM MURUGA
" ..

No comments:

Post a Comment