சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தித்து இன்றைய நாள் 
தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் மனநலமும் .. உடல்நலமும் நன்றே திகழ்ந்திடவும் வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவான் மஹாவிஷ்ணுவுக்கு ஆறு குணங்கள் உண்டு .. ஆதிசங்கரின் அத்வைதத் தத்துவப்படி பரம்பொருள் குணங்கள் அற்றவர் .. நிர்க்குணப் பிரம்மம் என்று கருதப்படுகிறார் .. ஆனால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவப்படி பகவான் கல்யாண குணங்கள் எனப்படும் உயர்ந்த குணங்களைக் கொண்டவர் .. 

1 - ஞானம் - எல்லாம் அறிந்திருத்தல் ..
2 - ஐஸ்வர்யம் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடம் 
கொண்டிருத்தல் ..
3 - பலம் - எல்லாவற்றையும் தாங்கிப்பிடிக்கும் (காக்கும் 
வலிமை) 
4 - வீரியம் - சக்தி சிறிதும் குன்றாத தன்மை ..
5 - தேஜஸ் - தன்மயமான .. முழுமையான நிலை .. மற்றும் 
எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் தெய்வாம்சம் .. 
6 - சக்தி - எதையும் செய்யக்கூடிய ஆற்றல் .. 
வாசுதேவா இந்த ஆறுகுணங்களையும் தன்னிடம் கொண்டவராக விளங்குகிறார் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! சகல சம்பத்துக்களும் பெற்றிடுவோம் ! ஓம் நமோ நாராயணா ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY ..
' OM NAMO NAARAAYANAA ' ..

No comments:

Post a Comment