சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பூமியில் சூரியாதிக்கம் நிறைந்த நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூரியஹ் ப்ரசோதயாத் !! 


நாம் நமது இருகண்களாலும் பிரத்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும் .. சிவாலயங்களில் சூரியபகவான் தனித்தும் .. நவக்கிரங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கிறார் ..
ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதைக் காணமுடியும் ..

ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர்மிகும் அறிவுடன் .. சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும் .. 
மாறுபட்ட குணாதியங்கள் உள்ள பலபேரை ஒரேதிசையில் 
வழிநடத்திச்செல்லக்கூடிய தலைமைக்குணம் கிடைக்கும் .. 

நேர்மையான வழியைமட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் 
நிமிர்ந்தநடையும் .. நேர்கொண்டபார்வையும் .. புவியில் யாருக்கும் அஞ்சாத வைரநெஞ்சமும் கிட்டும் .. எடுத்த காரியத்திலிருந்து சற்றும்மாறாத மன உறுதிகிட்டும் .. 
நாராயணனுக்கே உரிய சங்கும் .. சக்கரமும் .. சூரியனுக்கு உண்டு என்பதால் .. நாராயணனைச் சூரியநாராயணன் என்று வணங்குகின்றோம் .. 

சூரியனைப் போற்றுவோம் ! மகிழ்ச்சியும் .. நல்லாரோக்கியமும் பெற்றிடுவோம் ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் ! ஒம் சூர்யாய நமஹ ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
" JAI SURYADEV " .
.

No comments:

Post a Comment