சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதி வளர்பிறை அஷ்டமித் திதியாகும் .. விநாயகருக்கும் .. அன்னை மஹாலக்ஷ்மிக்கும் உகந்த “ தூர்வாஷ்டமி “ விரதநாளுமாகும் .. விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்துவர உடல்வலிமை உண்டாகும் .. 
தங்களனைவருக்கும் இன்றையநாளில் மனநலமும் .. உடல்நலமும் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

அறுகம்புல்லை ‘ தூர்வை ‘ என்பார்கள் .. அதை லக்ஷ்மி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது 
தூர்வையைப் புகழும்வகையில் வேதத்தில் பலமந்திரங்கள் 
உள்ளன .. 

அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால் கெட்டகனவுகள் விலகி நன்கு உறக்கம்வரும் .. துர்க்கையத்தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனைசெய்வது மிகவும் சிறந்தது .. 

உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரப 
( ஆவணி ) மாதத்தின் வளர்பிறை அஷ்டமி .. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர் .. இந்தவிரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம் .. குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் .. இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும் .. இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும் .. எல்லா இடத்திலும் உணவு .. நீர் .. ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும் .. நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான புத்திரர்களைப்பெறுவதற்கும் .. நினைத்தகாரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் ..

இந்த துர்வாஷ்டமியைப் போற்றும் மந்திரம் - 
தூர்ஸ்வபீனங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே !
உன்னை வணங்குகின்றோம் ! உன்னைத் தொடுவதாலும் !
பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எமது எல்லாப்பாவங்களும் நீங்கவேண்டும் ! நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ ! அவ்விதமே நாமும் படிப்படியாக வளர்ந்து சகலசௌபாக்கியங்களையும் பெறவேண்டும் ! ஹே ! தேவியே ! நீ நன்கு வளர்வாயாக !
உன்னை நாமும் பூஜிக்கின்றோம் ! உன்னை நம் தலையில் தாங்கிக்கொள்கின்றோம் ! நீ எம்மை எப்பொழுதும் காத்தருள்வாயாக ! ஜெய் சக்தி !! .. 

அன்னையைப் போற்றுவோம் .. அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. 
MAY ' MAA LAKSHMI ' SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. ' OM SHAKTHI OM ' .. JAI MATA DI ..

No comments:

Post a Comment