SWAMY SARANAM...PANVEL BALAGAN SARANAM SARANAM...GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று புரட்டாதிமாத பௌர்ணமியும் .. உமாமஹேஷ்வர விரதமும் கூடிவருவதால் ஆலயம் சென்று சிவனையும் .. சக்தியையும் வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் .. 
“ஓம் சிவசக்தி ஓம் “ ..

சிவனாரின் மகிமையைப் போற்றி அவர் அருள்பெற அரிய விரதங்கள் பல உள்ளன .. அவற்றுள் ஒன்று புரட்டா
தி பௌர்ணமி தினத்தில் வரும் “ உமாமஹேஷ்வர விரதம் ” ..
அம்மையும் .. அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து .. காத்து .. அருள்சுரந்தருளி .. இம்மைக்கும் .. மறுமைக்கும் தோன்றாத துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வேண்டுவன அடையலாம் .. 

உமையும் .. உமையொருபாகனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னருள் புரியும் அம்மையப்பனைத் தொழுதிடுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம்! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA AND SHAKTHI ..
MAY YOU BE BLESSED WITH EVERY SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM SHIVSHAKTHI OM
"

No comments:

Post a Comment