அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி ஒன்பதாம் நாளாகிய இன்று நவமித் திதியும் சேர்ந்து வருவது விசேஷம் .. கடந்த எட்டு நாட்களாக மஹிஷாசுரனுடன் போர்செய்து ஒன்பதாம் நாளாகிய நவமித் திதியிலே மஹிஷாசுரனை வதம்செய்ததாகக் கூறுவதுண்டு .. அன்றிலிருந்தே அன்னையை மஹிஷாசுரமர்தினி என்றழைப்பர் .. மஹிஷாசுரன் கடும்தவம்புரிந்து பிரம்மதேவனிடம் பெற்ற தவவலிமையினால் அகந்தைமேலிட தேவலோகத்தையும் .. பூலோகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரம் அது .. மஹிஷாசுரன் தனக்கு ஓர் ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும் .. சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான் .. தன்னை அழிக்கும் தகுதியுள்ள ஒரு ஸ்திரி சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி கர்வமும் அகங்காரமும் கொண்டான் .. அறிவுவேண்டாம் .. அறிவுள்ள நூல்கள்வேண்டாம் .. அறிவுக்கலைகள் வேண்டாம் .. இசைவேண்டாம் .. சிற்பம் .. சித்திரம் .. கோயில் .. கோபுரம் .. ஒன்றும் வேண்டாம் .. எல்லாவற்றையும் அழித்துப்போடுங்கள் என்று கட்டளையிட்டான் .. தேவர்கள் .. முனிவர்கள் .. மனிதர்கள் எல்லோரும் நடுநடுங்கினார்கள் .. அவர்களில் பலர் மஹிஷாசுரனுக்கு அடிபணிந்தனர் .. தேவலோகத்தையும் .. சிம்மாசனத்தையும் பறிகொடுத்த இந்திரன் முதலான தேவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி தமக்கு ஏற்பட்ட துயரில் இருந்து தம்மைக்காத்தருளவேண்டும் என இறைஞ்சி நின்றனர் சிவன் .. விஷ்ணு .. பிரம்மா சக்திகளினால் சகல அம்சங்களையும் பொருந்திய ஒரு “ சங்கார மூர்த்தியை “ சிருஷ்டித்தார்கள் .. சிவன் அதற்கு சக்திகொடுக்க .. அதுவே முகமாகவும் ..பிரம்மாவின் சக்தி உடலாகவும் .. திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும் .. எமதர்மனின் சக்தி கூந்தல் .. அக்னிபகவானின் சக்தி கண் .. மன்மதனின் சக்தி புருவம் .. குபேரனின் சக்தி மூக்கு .. முருகனின் சக்தி உதடு .. சந்திரனின் சக்தி தனங்கள் .. இந்திரனின் சக்தி இடை .. வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள் .. அதற்கு துர்க்காதேவி .. சண்டிகாதேவி .. காளிதேவி .. எனநாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர் .. மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்க்காதேவி மஹிஷாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோகத்தையும் .. பெற்றுக்கொடுத்து காத்தருளினாள் .. மஹிஷாசுரனை அழித்ததால் துர்க்காதேவி “ மஹிஷாசுரமர்தினி “ என்று பெயர்பெற்றாள் .. மஹிஷாசுர சம்ஹாரம் சுலபமான ஒன்றல்ல .. மஹிஷாசுரனின் தலைகொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மஹிஷாசுரனாக உருவாகும் .. சக்திகொண்டது .. அதனால் துர்க்காதேவி ஒருபாத்திரத்தில் அவனது இரத்தத்தை ஏந்தி அவைநிலத்தில் சிந்தாதவண்ணம் தானே அதைப்பருகி .. அவனின் சங்காரத்தை நிறைவுசெய்தாள் மஹிஷம் என்றால் எருமை .. எருமையான மூர்க்கத்தனம் மோட்டுத்தனம் .. சோம்பேறித்தனம் .. கொண்டதும் சேற்றில் மகிழ்ந்து வாழும் தன்மையும் கொண்டது .. மனிதரிடையே காணப்பெறும் இந்த மஹிஷகுணங்களைக் களைந்து (சம்ஹாரம் செய்து) ஊக்கமுடையவர்களாகவும் .. உற்சாகம் உள்ளவர்களாகவும் ஆக்கும் விரதமாக எல்லோராலும் அனுஷ்டிக்கப்பெறுகின்றது .. அன்னையைப்போற்றுவோம் ! திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று அனைத்திலும் வெற்றிகாண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. ACCORDING TO THE NARRATIVE FROM THE DEVI MAHATMYA OF THE MARKANDEYA PURANA THE FORM OF DURGA WAS CREATED AS A WARRIOR GODDESS TO FIGHT THE DEMON ' MAHISHAASURANA ' .. THE BATTLE THAT OCCURRED BETWEEN GODDESS CHAMUDEESHWARI AND THE ( DEMON ) ASURA MAHISHAASURA IT LASTED 9 DAYS AND 9 NIGHTS .. AND FINALLY SHE KILLED MAHISHAASURA ON NAVAMI DAY .. THAT'S TODAY .. MAY 'MAA DURGA' GUIDE YOU .. AND PROTECT YOU ALWAYS IN WHATEVER YOU DO .. AND WHEREVER YOU ARE .. " JAI MATA DI " .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment