PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது சகலகிரகதோஷங்களும் நீங்கி .. மனநலமும் 
உடல்நலமும் புத்துணர்வு பெற்றுத் திகழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹா தேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும் ..
கைலையில் வசிப்பவராகவும் .. அரக்கர்கள் .. தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களைக் கொடுப்பவராகவும் .. பாவங்களினால் பெரிய பாபமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் உள்ளார் .. 

சிவன் என்றும் உள்ளவர் .. எங்கும் நிறைந்தவர் .. எல்லாம் அறிபவர் .. எல்லாம் வல்லவர் .. தூயவர் .. அழிவில்லா இன்பம் உடையவர் .. பிறர்க்கு ஆட்படாதவர் .. 

சிவபெருமான் அருவம் .. அருவுருவம் .. உருவம் .. என மூன்று வடிவங்களில் உள்ளார் .. 
அருவத்திருமேனி - சத்தர் என்றும் ..
அருவுருவத்திருமேனி - பரம் .. பொருள் என்றும் .. 
உருவத்திருமேனி - பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது ..

அருவுருவமாக - லிங்கமும் .. மஹேஷ்வர மூர்த்தங்கள் ..
மற்றும் சிவ உருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் பக்தர்களால் வழிபடப்படுகின்றன .. 

சிவனைப்போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக!
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI BHOLE NATH "

No comments:

Post a Comment