ராசியில் அல்லது லக்னத்தில் புதன் அளவிற்கு மீறிய சுபபலம் பெற்றிருந்தாலும், உலக வாழ்க்கையின் சுகத்திற்கும், வெற்றிக்கும், அது தடங்கலாக இருக்கும். அளவிற்கு மீறய பொறுமை, சாந்தம், பணிவு, பிறருக்கு விட்டுக்கொடுப்பது, நியாயமாகத் தனக்கு கிடைக்க வேண்டியதற்கு கூடப்போராடாமல் இருப்பது ஆகியவற்றால் பல நஷ்டங்கள் ஏற்படும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் புதன் அம்சத்துடன் திகழும் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். அத்தகைய தலங்கள் 4 உள்ளன.
1. ஸ்ரீரங்கம் கோவிலினுள் உள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் சன்னதி.
2. திருவஹிந்திரபுரம்- ஸ்ரீஹயக்ரீவர்
3. செட்டிப்புண்ணியம்-ஸ்ரீயோக ஹயக்ரீவர்.
4. காசி- கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு, அதன்பிறகு புதன் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கத்தை வழிபடவும். இது கடுமையான புதன் தோஷத்திற்கு மட்டும் உரிய சிறந்த பரிகாரமாகும்.
No comments:
Post a Comment