TODAY 10TH DAY VIRADHAM......SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இதயம் நிறைந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. ‘ தீபம் ‘ என்றால் ஒளிவிளக்கு .. ‘ ஆவளி ‘ என்றால் வரிசை .. வரிசை .. வரிசையாய் விளக்கேற்றி .. இருள்நீக்கி .. ஒளிதரும் பண்டிகையே தீபாவளி .. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற தினத்தினை நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளித் திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் .. மது .. கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச்சென்று மறைத்து வைத்துவிட்டனர் ..அதனை மீட்டெடுக்க மஹாவிஷ்ணு பாதாளம்நோக்கிச் சென்றார் .. அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தாள் ..அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும்தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்றதாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம்பெற்றான் .. பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான் .. மஹாவிஷ்ணுவின் கிருச்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்துகொண்டார் .. மனித அவதாரத்தில் சத்தியபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது .. நரகாசுரனை வதம்செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தேரோட்டுவதிலும் .. விட்போர் .. வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்யபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார் .. நரகாசுரனுடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயக்கமடைந்ததுபோல் நடித்தார்.. தனது கணவரின் நிலைகண்டு கடும்கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்துப் போர்செய்து அவனை அழித்தாள் .. அப்போதுதான் அவன் தனது மகன் எனத் தெரிந்து கொண்டாள் .. நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதைக்கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீயமகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்தநாளை தீபமேற்றிக்கொண்டாட வேண்டும் .. ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்படவேண்டும் .. இன்றைய தினத்தில் செய்யப்படும் எண்ணெய்க்குளியலின் எண்ணையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் .. இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத்தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருளவேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக்கொண்டார்கள் .. ஓம் கங்கேஷ்ச்ச யமுனே ! சைவே கோதாவரி! சரஸ்வதி ! நர்மதே ! சிந்து காவேரி ஜலேச்மின்! சந்நிதம் குரு ! இந்த ஸ்லோகத்தைப் பிரார்த்தித்த வண்ணம் நீரை தலையில் வார்த்துக்கொண்டால் கங்காஸ்நானம் செய்த புண்ணியமும் .. அன்னை கங்காதேவியின் அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் கிட்டுவதாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A VERY HAPPY PROSPEROUS DIWALI AND MAY HAPPINESS FILL YOUR LIFE WITH LOVE AND LIGHT .. DIWALI ALSO KNOWN AS THE FESTIVAL OF LIGHTS .. IT IS CELEBRATED WITH THE CRACKERS AND DEEPAM IN ALL THE HOUSES TO MARK VICTORY OF LORD KRISHNA OVER THE EVIL DEMON NARAKASURA .. IT IS NOT MEANT FOR CRACKERS AND SWEETS .. BUT IT IS ABOUT SHARING WITH OTHERS TOO .. " HAPPY DIWALI "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment