TODAY OUR 26TH DAY VRADHAM......SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
கார்த்திகைமாதம் பிரதமை முதல் .. மார்கழி சஷ்டிவரையிலான பிள்ளையார் நோன்பு இன்றிலிருந்து 21 நாட்களுக்கு (குமாரசஷ்டி விரதம் ) அனுஷ்டிக்கப்படுகின்றது ..
தங்களனைவரின் குடும்பத்தில் சுபீட்சமும் .. மகிழ்ச்சியும் .. என்றென்றும் நிலைக்கவும் .. தடைகள் யாவும் களைந்து அனைத்து காரியங்களும் வெற்றியடையவும் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு .. உணவை விடுத்தேனும் .. சுருக்கியேனும் .. மனம் .. வாக்கு .. காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதலே விரதமாகும் .. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம்
புத்தி .. முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும் .. இதனால் ஞானம் .. நல்லறிவு கைகூடும் ..

இந்த விரதமானது மஹாவிஷ்ணுவைப் பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதகமாயிருந்தது ..
இருபத்தோரிழையோடு கூடிய காப்பை ஆண்கள் வலதுகையிலும் .. பெண்கள் இடது கையிலும் கட்டி விரதத்தை
ஆரம்பிப்பர் .. முதல் இருபது நாட்களும் ஒருபொழுது
உணவு உண்டு .. இறுதி நாள் உபவாசம் இருந்து சுவாமிதரிசனஞ் செய்து உணவுண்டு இவ்விரதம் நிறைவு செய்யப்படும் ..

இருபத்தியொரு நாட்களும் விநாயகரது கதை கேட்பதும்.. விநாயகர் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் புண்ணியமாகும் .. ஆலயங்களில் விசேட அபிஷேகங்கள் .. பூஜைகள் நடைபெற்றபின் அகத்தியமுனிவரால் எழுதப்பட்ட
பிள்ளையார் கதையை கற்றுத்தேர்ந்தோர் பாடிப்பயன் சொல்ல
விரதமிருப்போர் இருந்து கேட்டுப் பயன்பெறுவர் ..

விநாயகரைப் போற்றுவோம் ! அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ..
” ஓம் விக்னேஷ்வராய நமஹ ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU WITH EVERY SUCCESS .. " JAI GANESHA " ..

No comments:

Post a Comment