TODAY OUR 9TH DAY VIRADHAM...SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMஅனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று திங்கட்கிழமையும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவது சாலச்சிறந்தது .. இதனை சோமவாரப் பிரதோஷம் என்பர் .. மாலைவேளையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சகலபாவங்களையும் போக்கும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான வழிபாடாகும் .. தோஷம் என்ற வடமொழிச்சொல்லிற்கு ‘ குற்றம் ‘ என்று பொருள் .. பிரதோஷம் என்றால் .. ’குற்றமற்றது’ என்று பொருள் .. குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .. உலகம் ஒடுங்குகிறது .. மனம் ஈஸ்வரனிடம் ஒடுங்க .. அதுவே நல்ல நேரம் .. பகலின்முடிவு சந்தியாகாலத்தின் ஆரம்பம் .. சிருஷ்டி முடிவுபெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம் .. வில்லைவிட்டு அம்பு சென்று விட்டாலும் .. மந்திர உச்சாரணபலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல .. ஈஸ்வரன் தான்விட்ட சக்திகளை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான் .. பிரதோஷ காலத்தில் ( மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரம் ) ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அமையும் .. சகலபாவங்களையும் போக்கும் பிரதோஷவழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகலநலன்களையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED ' PRADOSHAM ' .. WHOEVER PRAYS LORD SHIVA DURING 4.30 - 6.00 IN THE EVENING ON PRADOSHAM DAY WILL BE BLESSED AND THEIR WISHES WILL BE FULFILLED .. " JAI BHOLE NATH " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment