Today our viradham 25th day.....Swamiye saranam iyyappa...Guruve Saranam Saranam.......அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களும் ” உரித்தாகுக.. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றிவழிபடுபவர்கள் பலபுண்ணியபலன்களை அடைவார்கள் .. அஷ்டலக்ஷ்மிகளும் இல்லத்தில் இஷ்டமாக வந்துகுடியேறி தங்கள் அனைவருக்கும் மங்களங்களை வாரிவழங்கி மகிழ்விக்கும் ஓர் பொன்னாளாக இந்நாள் மிளிரட்டும் என்று வாழ்த்தி அண்ணாமலையோனை பிரார்த்திக்கின்றேன் .. கார்த்திகைமாத பௌர்ணமிநாளில் தமது இல்லங்களிலும் .. ஆலயங்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கோண்டாடும் தீபத்திருநாளே கார்த்திகைதீபமாகும் .. அதுமட்டுமல்ல தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல .. பிற உயிரினங்களின் மீதும்படுகிறது .. புழு .. கொசு .. நிலம் .. நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாமும் படுகின்றது .. தீபஒளி எப்படி எல்லோர்மீதும் பரவுகின்றதோ அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார்மீதும்படவேண்டும் என்பதனையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது .. படைத்தல் தொழிலைச்செய்யும் பிரம்மனும் .. காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர் .. சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத்தோன்றினார் .. அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது இருவரும் தேடிக்காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுகொண்டனர் .. அவர்கள் இருவரும் தாம்கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்டியருளவேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார் .. இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும் .. திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை .. பஞ்சபூதலிங்கத்தில் அக்னிலிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே ! இங்குள்ள குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுவதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி .. மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞானஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம் .. அருட்பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும் உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது .. அக்னியிலே பலவிதமான தீபங்கள் தோன்றுவதுபோல் “சிவம்” என்ற நாமம் ஒன்றே பலதத்துவங்களைக் கடந்து பற்பலஜோதி ஸ்வரூபமாகக் காட்சிதருகிறது .. அக்னியின் சக்தியில் அழுக்கு களையப்படுகிறது .. திருவண்ணாமலை கிரிவலத்தின் முதல் அடியில் - உலகை வலம்வந்தபலனும் .. இரண்டாவது அடியில் - புண்ணியதீர்த்தங்களில் நீராடிய பலனும் .. மூன்றாவது அடியில் - அஸ்வமேதயாகம் செய்தபலனும் .. நான்காவது அடியில் - அஷ்டாங்கயோகம் செய்தபலனும் கிடைக்கும் .. நினைத்தாலே முக்திதரும் அண்ணாமலையானைப் போற்றி அவரது அருட்கடாக்ஷ்த்தையும் .. திருவருளையும் பெற்றிடுவோமாக ! அண்ணாமலையோனுக்கு அரோஹரா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A PROSPEROUS " KARTHIGAI DEEPAM " .. LET THIS FESTIVAL OF DEEPAM ( LIGHTS ) BRINGS BRIGHTENED AND ENLIGHTENED LIFE LIKE THE LIGHT OFLAMPS .. MAY LORD SHIVA BLESS YOU AND MAKE YOUR LIFE SHINE AND GLOW LIKE THE DEEPAM .. " OM NAMASHIVAAYA "

No comments:

Post a Comment