PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
இன்று மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகிய 
” பரசுராமர் ஜெயந்தி தினமாகும் “ .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் மனத்தைரியத்தையும் .. ஆத்மபலத்தையும் .. நினைத்தகாரியம் அனைத்தும் ஈடேறவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஜாமதக்ந்யாய வித்மஹே !
ம்ஹாவீராய தீமஹி !
தந்நோ பரசுராம ப்ரசோதயாத் !!

பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க பலதலங்கள் சென்று வழிபாடு செய்தார் .. ஒருமுறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் .. அப்போது அவருக்குக் கிடைத்த
லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றார் .. பின் தன் தாய்க்கு தர்ப்பணம் கொடுத்தார் .. 

பரசுராமருக்கு பிறகு .. மதங்க மகரிஷி .. கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பூஜை
செய்துள்ளனர் .. வல்லம் என்றால் ‘ தலை ‘ என்று பொருள் ..
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின்
தலைப்பகுதி இத்தலம்வரை நீண்டு கொண்டிருந்ததால் இத்தலம் “ திருவல்லம் “ எனப்பட்டது .. 

திருவனந்தபுரம் பத்மநாபரைப் பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு 
சுருங்கிவிட்டதாகவும் .. புராணங்கள் கூறுகின்றன .. 

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி .. கோயில் பெருமானின் உடல் பகுதியாகவும் .. 
திருவல்லம் .. பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும் ..
திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமானின் கால்பகுதியாகவும் விளங்குவதால் ஒரேநாளில் இம்மூன்று தளங்களையும் தரிசிப்பது மிகவும் நல்லது .. 

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர்தர்ப்பணம் கொடுத்த தலமாதலால்
இத்தலம் “ தட்சிணகயை “ என அழைக்கப்படுகிறது .. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார் .. 

பரசுராமர் மஹாவிஷ்ணுவின் 6வது அவதாரமாவார் .. வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கமாகும் ..
தன் தாய் ஒருவாலிபனை ஏறிட்டு பார்த்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக தந்தை ஜமத்கனி முனிவரின் உத்தரவுப்படி
தாயை வெட்டிக்கொன்றவர் .. பிறகு தந்தையிடம் பெற்ற
வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர் .. சகலகலைகளையும்
கற்றவர் .. அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை .. இவரது ஆயுதம் ‘ பரசு ‘ என்பதால்
“ பரசுராமர் “ ஆனார் .. 

தன் தந்தை ஜமத்கனி முனிவரை .. அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக ஒட்டுமொத்த அரசவம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார் .. இவ்வேளையில் ஸ்ரீராமனும் மன்னர் குடும்பத்தில் இருந்துவர .. வந்திருப்பது மஹாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை உணர்ந்தார் .. அதன்பின் தன்னிடமிருந்த அஸ்திரங்களையும்
வில்லையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய சென்றுவிட்டார் .. 

இவர் தன் கோடரியால் மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய 
பகுதியே மலைநாடான கேரளா ஆகும் .. பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது .. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது இந்தபீடத்தை 
பரசுராமனின் சீடரும் .. சீரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார் .. பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும்காட்சி சிலையுள்ளது .. 

பிரம்மா .. விஷ்ணு .. சிவன் .. மூவரும் தனித்தனி அகஸ்தியர் சன்னதிகளில் அருளுகின்றனர் .. இங்குள்ள சிவபெருமானை 
பரசுராமரும் .. மஹாவிஷ்ணு வின் அம்சமான வேதவியாசரை
விபாகரண முனிவரும் .. பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர் ..

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர்தர்ப்பணம் கொடுத்த தலமாதலால்
இத்தலம் “ தட்சிணகயை” என அழைக்கப்படுகிறது .. 
ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார் .. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க பள்ளிக் குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷபூஜை
செய்து வழிபடுகின்றர் .. 

குழந்தைகள் நல்லொழுக்கத்துடனும் வளர இங்கு வழிபாடு செய்கின்றனர் .. பரசுராமரைப் போற்றுவோம் .. அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ..
” ஓம் பரசுராய நமஹ “ .

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD PARASURAMA THE SIXTH INCARNATION OF LORD VISHNU ... MAY HE SHOWER YOU WITH POWER .. COURAGE AND ACHIEVEMENT.. 
" HAPPY PARASURAM JAYANTI "

No comments:

Post a Comment