PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA..PANVEL BALAGANE SARANAM IYYAPPA......GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமுமாகும் .. மாலையில் கார்த்திகை நட்சத்திரமும் வருவதால் ஆலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

தங்களனைவருக்கும் வேலவன் அருளால் நல்வாழ்வு .. ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் யாவும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் ,, கந்தனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் .. ஆற்றலையும் ..
அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும் 

கூவுகின்ற சேவல் நாதவடிவமானது .. சேவல்கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது .. 

மயிலின்மீது வீற்றிருக்கின்றான் முருகன் .. மயில் மனத்தின்
சின்னம் .. பரிசுத்தமான அழகான உள்ளம்தான் இறைவனின் 
கோயில் என்பதனை மயில்வாகனம் விளக்குகிறது ..

பாம்பின்மீது மயில் நிற்பது .. முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சிசெய்கிறான் என்பதைக் காட்டுகிறது .. தீராதநோய்களையும் தீர்த்துவைக்கும் தயாபரன் முருகன் ..
ஆகவே அவனை ’வைத்தியநாதன் ’ என்றும் வாழ்த்துகின்றோம் 
கிடைக்காத பொருட்களையும் .. பேறுகளையும் .. வேண்டும் பக்தர்களுக்கு வழங்குவதால் ‘ வரதராசன் ‘ என்றும் பெயர் பெற்றவன் முருகன் .. 

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகின்றது .. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற ஆணவம் .. கன்மம் .. மாயை எனப்படும் மூன்று 
மலங்களே அவை .. மனதிலே இருக்கின்ற நல்ல எண்ணங்களை வளர்த்து .. தீய எண்ணங்களை வென்று சிறப்பாக வாழ வழிவகுக்கின்றார் .. 

முருகனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றிகாண்போம் ! வெற்றி நிச்சயம் ! 
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ! வாழ்க வளமுடனும் ..
என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM MURUGA "

No comments:

Post a Comment