தைபிறந்தால் வழிபிறக்கும் ‘ என்னும் கூற்றுக்கிணங்க .. தைமாதம் முதல் நாளாகிய இன்று தங்கள் இல்லங்களில் பொங்கல் பொங்க .. உள்ளங்களில் இன்பம் பொங்க .. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
இன்று சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால் மிகவும் புனிதமான நாளாகும் .. கோடையின் தொடக்கமுமாகும் .. கோடைக்காலம் தரும் சூரியனின் வடதிசைப்பயணம் அதாவது உத்தராயணம் தேவர்களின் பகல்பொழுது .. அதன் தொடக்கம் இந்த மகரசங்கராந்தி என்பதால் புலரும் சூரியனை வணங்குவது மிகவும் புண்ணியம் தரக்கூடியது ..
உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன் .. பணியாட்கள் .. மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா .. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார் .. கடல்நீரை ஆவியாக்கி மழைபொழியச் செய்கிறார் .. கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார் ..மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார் .. அவருக்குரிய நாளாக இந்தநாள் அமைந்துள்ளது ..
இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணியகாலத்தில் தொடங்கும் பொங்கல் திருநாளில் அனைவரும் சூரியவழிபாடு செய்து கிரகதோஷங்கள் நீங்கி .. சுபீட்சமான வாழ்வு மலர்ந்திடவாழ்த்துகிறேன் .. சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 
“ ஓம் சூரியபகவானே நமோஸ்துதே “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. .. WISH YOU ALL AND YOUR FAMILY
A VERY HAPPY PONGAL .. MAY THIS AUSPICIOUS CELEBRATION BRING IN THE PROMISE OF GOOD HARVEST .. SWEETNESS OF PONGAL .. BRIGHTNESS OF THE JOYOUS SUN .. AND PROSPERITY IN YOUR LIFE TOO .. " HAPPY PONGAL "

No comments:

Post a Comment