PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா... குருவே சரணம் சரணம்....பன்வேல் பாலகன் பதம் போற்றி போற்றி ....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத்
துதிப்பது சிறப்பு .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும்
மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷமும் .. திருவருளும் கிடைக்க்ப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..
அன்னையை வணங்குகின்றேன் .. 


ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

மஹிஷனை அழிக்க முப்பெருந்தேவியாக உருக்கொண்டு வந்த ஜகன்மாதாவான பராசக்தியே ! மஹாலக்ஷ்மி என்கிறது 
தேவி மகாத்மியம் .. 

தேவர்களும் .. அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது
தோன்றி விஷ்ணுவை மணந்து அவர் மார்பிலே நித்யவாசம் செய்யும் லக்ஷ்மியைத் துதித்த்தாலே நாராயணனனும் கூடவந்து “ லக்ஷ்மீநாராயணனாக “ நமக்கு அருள்புரிகின்றான் ..

உலகத்து நாயகி அவள் .. தன்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் 
தருகிறாள் .. கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள் .. ராஜராஜேஸ்வரியான பராசக்தி ஒவ்வோர் ஊரிலே ஒவ்வொரு பெயருடன் தன் மெய்யடியார் துயர்தீர்க்க 
தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அபயவரதஹஸ்தங்களால் தன் கருத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்று அருள்பாலிக்கின்றாள் .. 

மஹாலக்ஷ்மியை தனலக்ஷ்மி .. தான்யலக்ஷ்மி .. தைரியலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி .. வீரலக்ஷ்மி .. சந்தானலக்ஷ்மி கஜலக்ஷ்மி .. வித்யாலக்ஷ்மி என அஷ்டலக்ஷ்மிகளாகப் 
பிரித்துள்ளனர் .. எட்டுவகை செல்வங்களை வாரிவழங்குபவள் அன்னை .. அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து செல்வங்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DEVOTIONAL FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. 
MAY SHE SHOWER WITH GOOD STRENGTH .. GOOD FORTUNE AND HAPPINESS .. " OM SHAKTHI
" .. JAI MATA DI ..

No comments:

Post a Comment