என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. தைப்பொங்கலுக்கு அடுத்தநாளாகிய இன்று உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருவிழா தான் மாட்டுப் பொங்கல் .. “ கால்நடைகளே நமது மூதாதையரின் செல்வம் “ என்று பண்டைய இலக்கியங்களின் மூலம் அறியமுடிகின்றது ... மற்றும் உடன் பிறந்தோருக்கான கணுப்பிடி - பலகுடும்பங்களில் மாட்டுப்பொங்கலன்று கணுப்பிடி என்ற வழக்கமும் உண்டு .. இது உடன்பிறந்த சகோதரனின் நலனுக்காகச் சகோதரிகள் வேண்டிக்கொள்வது .. “ மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக .. நிர்மலமான மனதுடன் தானும் .. அதைப்போலவே வளமான வாழ்க்கையுடன் உடன்பிறந்த சகோதரரும் நீடூழி வாழவேண்டும் என்று பஞ்சபூதங்களிடம் மங்கையர் பிரார்த்தனை செய்துகொள்வர் .. அன்றையதினம் முதல்நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச்சாதம் .. தயிர்சாதம் போன்றவற்றை ஒவ்வொரு கைப்பிடி பிடித்து காகத்துக்கு அர்ப்பணிப்பார்கள் .. இதுவே ‘ கணுப்பிடி ‘ என்பர் .. மேலும் .. திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம் தமிழின் பெருமையையும் .. தமிழர்களின் பெருமையையும் உலகிற்குத் தெளிவாக .. என்றும் அழியாதவகையில் வெளிப்படுத்தியுள்ளதால் இந்த நாளை “ திருவள்ளுவர் தினமாகவும் “ கொண்டாடுகின்றனர் .. தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF ALMIGHTY .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND PROSPERITY ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment