‘ தைப்பூசத்திருநாள் ‘ நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக ..
இன்றைய நாளில் தங்களனைவருக்கும் முருகப்பெருமானின்
அருட்கடாக்ஷ்ம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் ..
தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும் ..
மேற்கில் முழுநிலவும் .. ஞானசபையில் இருந்து அக்னியான
ஜோதியும் ஒரே நேர்கோட்டில் அமையும் .. இந்த அதிசயம்
தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் ..
சூரனை வதம்செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் பழனிமலையில் வேல்வழங்கி ஆசிவழங்கினாள் அன்னை ..
அதன்காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
முருகனையும் ஜோதியையும் ( வேல் ) எப்போதும் பிரிக்கமுடியாது .. ஞானத்தின் அம்சம்தான் வேல் .. அந்தவேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானை
“ ஞானவேல் முருகன் “ என்று போற்றுகின்றன ஆகமங்கள் ..
வேலினை வழிபட்டால் தீயசக்திகள் நம்மைத்தாக்காமல்
இருப்பதுடன் அந்தசக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம் ..
சக்தியின் வடிவாய் சக்தியிடமே உருவான வேல் கந்தனின் தங்கை என்றும் அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாளே ’ தைப்பூசத் திருநாள் ‘ என்றும் போற்றி
வழிபடுகிறார்கள் ..
வேலாகிய ஜோதியை வழிபடும்பொழுது கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி வழிபடல்வேண்டும் .. வாழ்வில் ஏற்றம் காணலாம் ..
“ ஓம் ஜெய ஜெய மகாவீரபகவான் ஸ்ரீஸ்கந்தா நமோ நமஹ ..
ஓம் ஜெய ஜெய மஹாஜோதி சக்தி சரவணபவாயி நமோ நமஹ “ ..
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்தநடனம் ஆடி தரிசனம் அளித்த புண்ணியத்திருநாளும் தைப்பூசமே !
” அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ” எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி ஜோதியானதும் இத்திருநாளே !
தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக ! வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா !
சரணம் ! சரணம் சரவணபவனே சரணம் !!
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A " HAPPY THAIPUSAM .. MAY LORD MURUGA BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE ..
' THAIPUSAM ' IS DEDICATED TO THE HINDU GOD MURUGA THE SON OF SHIVA AND PARVATI .. IT IS BELIEVED THAT ON THIS DAY GODDESS PARVATI PRESENTED A LANCE TO LORD MURUGA TO
VANQUISH THE DEMON ARMY OF TARAKASURA .. THEREFORE THAIPUSAM IS A CELEBRATION OF THE VICTORY OF GOOD OVER EVIL .. " OM MURUGA "
No comments:
Post a Comment