PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM .. PANVEL BALAGANE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன் கிழமையாகிய இன்று பிள்ளையாருக்கு உகந்த 
‘ சதுர்த்தி விரதமுமாகும் ‘ .. ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. இக .. பர .. சுகங்கள் அனைத்தும் பெற்றிடவும் கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .. 
“ வி “ - என்பதற்கு - ‘ இல்லை ‘ என்று அர்த்தம் .. 
“ விநாயகர் “ - என்ற சொல்லுக்கு - இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை ( முதன்மையானவர் ) என்பது முழுப்பொருளாகும் . .

கோவில்களில் விநாயகபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது .. “ ஓம் அநீஸ்வராய நமஹ “ என்றும் கூறுவார்கள் .. ‘ அநீஸ்வராய ‘ என்பதற்கு - தனக்குமேல் ஒரு 
ஈஸ்வரன் ( இறைவன் ) இல்லை என்பது பொருளாகும் .. 

நவக்கிரக நாயகன் -
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன .. 
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளார் .. 
நாபியில் - சந்திரனும் ..
வலதுதொடையில் - செவ்வாயும் ..
வலதுகீழ் கையில் - புதனும் ..
வலதுமேல் கையில் - சனியும் ..
தலையில் - குருபகவானும் ..
இடதுகீழ்கையில் - சுக்ரனும் ..
இடதுமேல்கையில் - ராகுவும் .. 
இடது தொடையில் - கேதுவும் .. இடம்பெற்றுள்ளனர் .. 
எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும்
வழிபட்டு துதித்ததற்கான பலன்கிட்டும் .. 

அரசமரத்தடி ஏன் .. ? .. 
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் .. குளக்கரை
ஓரங்களிலும் உள்ள அரசமரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார்
அங்குதான் விநாயகரின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள் .. நிழல்படிந்த நீரில் குளிப்பது உடல்நலத்திற்கு நல்லது .. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்பதால் குளக்கரை ஓரம் இருக்கும் அரசமரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர் .

பெண்கள் அரசமரத்தை சுற்றிவரும்போது கிடைக்கும் காற்று 
பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது .. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ .. குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார் .. 

வெற்றி விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றியடைவோமாக ! வெற்றி நிச்சயம் ! .
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SADURTI DAY " AND MAY LORD GANAPATHY SHOWER YOU WITH EVERY SUCCESS AND DESTROY ALL THE EVILS AND OBSTACLES ..
" JAI GANESH "

No comments:

Post a Comment