SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM..

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று .. நீக்கமற நிறைந்திருப்பவரும் ..
விருப்பு .. வெறுப்பு இல்லாதவரும் .. நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும் .. துக்கங்களை 
களைபவருமான கணபதியை “ சங்கடஹர சதுர்த்தியாகிய “ 
இன்று பிரார்த்தித்து சகல நன்மைகளையும் பெறுவோமாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரததினங்கள் இருந்தாலும் விரததத்தில் மிகச்சிறந்ததும் 
பழமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய
“ சங்கடஹர சதுர்த்தியில் “ விரதம் இருந்தால் அளவுகடந்த 
ஆனந்தத்தையும் அடையலாம் .. சகல சௌபாக்கியங்களையும்
பெறலாம் .. ஒவ்வொரு மாதமும் வரும் “ சங்கடஹர சதுர்த்தி”
நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி எல்லாகாரியங்களும் வெற்றியடையும் ..
‘ ஹர ‘ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகைத் துன்பங்களுக்கு 
ஆளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையமுடியும் 
சிறப்பான கல்வியறிவு ..புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு .. என பலவிதமான நன்மைகளைப் பெறலாம் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் .. 

விரதமிருப்பது எப்படி ..? ..
அதிகாலை நீராடி பால் .. பழம் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன் நினைவோடு உபவாசமிருந்து .. மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொண்டு ஆலயத்தை எட்டுமுறை வலம்வருதல்
வேண்டும் .. அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும் .. 

கணபதியைப் போற்றுவோம் ! அனைத்து தடைகளையும் களைவோமாக !ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SANKADAHARA SADURTI DAY " AND MAY LORD GANESHA'S 
BLESSINGS REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE AS HE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE .. 
" JAI GANESHA " ..

No comments:

Post a Comment