SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் பாபாவின் அருட்கடாக்ஷ்மும்
மனதில் சாந்தியும் .. அமைதியும் நிலவிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டி வாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி ! 
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

சாயி கவசம் -
சீரடி வாழும் சாயிநாதா !
சேவடி பணிந்தோர்க் கருளும் ஈசா !
துவாரகமாயி ஆன சுடரே ! 
ஆலம் அமர்ந்த தெட்சிண குருவாய் ! 
வேலம் அமர்ந்த வித்தக வடிவே ! 
சாவடி என்ற தங்குமிடத்தில் 
சேவடி சாற்றிச் சிறப்புச் செய்தாய் !
பாவடி புனைந்த பக்தர்க்கெல்லாம் 
பரமபதத்தைப் பரிவுடன் தந்தாய் ! 

அன்பே சிவமாய் ஆனவரே ! 
அன்னைவடிவே அருள்நிதியே ! 
இன்ப துன்பம் கடந்தவரே ! 
எங்கள் குருவே சாயீஸ்வரா ! 

இருளாம் துயரை தீர்ப்பவரே ! 
அருளும் ஒளியைத் தருபவரே !
மருளும் மனதை மீட்பவரே ! 
மகிமைமிக்க சாயீஸ்வரா ! 
ஆதி அந்தம் அற்றவரே ! 
அடியார் போற்றும் அற்புதமே !
வேதவடிவாய் ஆனவரே ! 
வெற்றி அருள்வீர் சாயீஸ்வரா !! 

ஷீரடி பாபாவைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் 
வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் சாய் ராம் !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND PEACE .. 
" OM SAI RAM " ..

No comments:

Post a Comment