swamiye saranam iyyappa....guruve saranam...panvel balagane saranam iyyappa

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
சோமவார விரதமுமாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் .. பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர் .. சந்திரன் கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான் .. தன்னுடைய கொடியநோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து
நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும்பேறு பெற்றான் .. சந்திரனது பெயரால் தோன்றியது தான் சோமவார விரதம் .. 

திங்கள் கிழமையான இந்நாளில் சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ் பெறவேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான் .. பெருமான் வரமருள 
இந்த விரதம் சோமவார விரதமாக சிறப்பு பெற்றது .. சிவன் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி ‘ சோமநாதர் ‘ ஆனார் ..
சந்திரசூடராக .. சந்திர மௌளீஸ்வரராக ஆனார் .. 

சந்திரனின் துன்பம் நீங்க சந்திரனின் மனைவி ரோகிணியும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் .. அதனால் பெண்கள் சகல சௌபாக்கியங்களுடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் கிடைக்கவும் .. நோய் .. நொடிகள் இன்றி தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் ..

சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி .. பகைவர் .. பயம் அகற்றி அவர்களை நற்கதி அடையச்செய்வார் 
சிவபெருமான் .. சிவனைப்போற்றுவோம் சகல நன்மைகளையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS ... WISH YOU ALL A BLESSED SOMAVAARAM AND MAY LORD SHIVA SHOWER YOU WITH GOOD HEALTH .. GOOD LUCK .. AND HAPPINESS .. " JAI BHOLE NATH "

No comments:

Post a Comment