PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
‘ சோமவார விரத நாளாகும் ‘ ஆலயம் சென்று ஈஸ்வரனைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சந்திரனுக்குரிய கிழமை திங்கள் .. பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார் .. சந்திரனுக்கு 
“ சோமன் “ என்ற பெயருண்டு .. அதனால் சோமனை சூடிய 
சிவன் ‘ சோமசுந்தரர் ‘ என்றழைக்கப்படுகிறார் .. 

திங்களை முடியில் சூடியவர் என்பதனா லும் சிவவழிபாட்டிற்கு திங்கட்கிழமை முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது .. சந்திரன் சோமாவாரவிரதத்தைக் கடைப்பிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் ஒன்றைப் பெற்றான் .. ” இந்தவிரதத்தை அனுஷ்டிப்பவரெல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்
அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் “ என்று சிவன் கூறியுள்ளார் .. 

சிவனைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY HE SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. 
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

No comments:

Post a Comment