அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் சிறப்பான விரதங்களுள் ஒன்று .. 
“ சோமவார விரதமாகும் “ இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இவ்விரதம்
கடைபிடிக்கப்படுகிறது .. க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி
சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் .. சந்திரனுக்கு சிவபெருமான் அருள்புரிந்ததுடன் தன் தலையிலும் சூடிக்கொண்டார் .. சந்திரனின் மனைவி ரோகிணியும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் ..அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்தவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் ..

சோமவாரத்தன்று விரதமிருந்து பலன்பெற்ற ஒரு புராணக்கதை --
சந்திரவர்மன் என்ற மன்னனுக்கு அழகிய பெண்மகவு பிறந்தது
அவளுக்கு ” மந்தினி “ என்று நாமம் சூட்டப்பட்டது .. அவளது ஜாதகத்தைக் கணித்தவர்கள் சிறுவயதிலேயே தனது கணவனை இழந்துவிடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று
கூறினார்கள் ..

அதனால் மன்னரும் யாக்யவல்லியர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி முறையாக சோமவாரவிரதத்தைக் கடைப்பிடித்தாள் ..சோமவாரவிரதத்தன்று அதிகாலை நீராடி
நாள்முழுவதும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை
இடைவிடாது ஜபித்து .. உபவாசமிருந்து மாலையில்
எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ..ஆராதனைகள் செய்து
வழிபட்டு வரலானாள் ..

அவளுக்கு நளமகாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது .. அவர்கள் யமுனைநதியில் நீராடும்போது நீர்சுழலில் சிக்கி அவன்மூழ்க
நேர்ந்தது .. ஆயினும் ’ மந்தினி ‘ அனுசரித்த சோமவார விரதத்தின் பலனால் நாககன்னியர் அவனைக் காப்பாற்றினர்

இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும்வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம் ..சிவனைப்போற்றுவோம்!
அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! ஓம் நமசிவாய !

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED
' SOMVAR DAY ' AND MAY LORD SHIVA REMOVE ALL YOUR SINS AND BLESS YOU WITH HAPPINESS .. GOOD HEALTH AND PROSPERITY ..
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

SWAMIYE SARANAM....GURUVE SARANAM....

 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த 
நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஆயிரம்கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ! 
அருள்பொங்கும் முகத்தைக்காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி ! 
தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பாய் போற்றி ! 
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி ! 
தூயவர் இதயம்போலத் துலங்கிடும் ஒளியே போற்றி ! 
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி ! 
ஞாயிறே ! நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி ! போற்றி !! 

எட்டே வரியில் நாமும் ஆதித்தன் பெருமையெல்லாம் போற்றி .. சூரியபகவானின் அருட்கடாக்ஷ்த்தை பெற்றிடுவோமாக ! ஓம் சூர்யாய நமஹ ! 
வாழ்க வளமுடனும்! என்றும் நலமுடனும் !! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. 
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " JAI SURYA DEV "

SWAMIYE SARANAM...GURUVE SARANAM...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் சகல கிரகதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

சிவ சிவ என்கிலர் தீவினையாளர் ! 
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் ! 
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் ! 
சிவ சிவ என்றிடச் சிவகதி தானே !! 
“ என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவமூல மந்திரமாகும் “

மஹாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனைப் பார்த்து 
“ எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடையமுடியாத ஐஸ்வர்யம் என்று எதுவும் இல்லை “ என்று சொல்கிறார் .. 

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவமந்திரம் .. சிவதரிசனம் .. சிவவழிபாடு .. முதலியனவாகும் .. இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாததாகும் .. 
சிவமே ! எல்லா உலகங்களுக்கும் ! எல்லா உயிர்களுக்கும் 
முதலானவன் ! எல்லாம் சிவமயம் ! எங்கும் சிவமயம் ! எதிலும் சிவமயம் ! 

“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபிப்போமாக ! வாழ்வில் நலங்கள் யாவும் பெறுவோமாக ! 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING  .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA 
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NANASHIVAAYA " JAI BHOLE NATH ..

SWAMIYE SARANAM IYYAPPA....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று “ சங்கடஹர சதுர்த்தி விரதமும் “ சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகரை வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரது குடும்பத்திலும் 
சுபீட்சமும் .. தடைகளின்றி அனைத்து காரியங்களிலும் வெற்றி
பெறவும் விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது 
நாளான சதுர்த்தி திதியை ( தேய்பிறை சதுர்த்தி ) 
“ சங்கடஹர சதுர்த்தி “ என்பர் .. 

வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடுவிளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .. ஆனால் பௌர்ணமிக்குப் பிறகு 
வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது..
இதுவே ‘ சங்கடஹர சதுர்த்தியாகும் ‘ .. 

ஸ்ரீவிநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது .. 
சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தித் தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைந்து கடும்தவம் செய்ய 
சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் 

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது .. அந்த நன்னாளைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம் .. ” சங்கடம் ” என்றால் 
இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் .. தடைகள் .. என்று 
அர்த்தம் .. ” ஹர “ என்றால் நீக்குவது என்று பொருள் .. 

வாழ்வில் கஷ்டநஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழ ‘ சங்கடஹர சதுர்த்தி ‘ வழிபாடு மிக முக்கியமானதாகின்றது .. 

சங்கடங்கள் .. இக்கட்டுகள் .. நெருக்கடிகள் .. தீருவதற்கு 
சங்கடஹர கணபதியை வணங்குவோமாக ! வாழ்வில் தீராமலிருக்கும் பிரச்சினைகள் .. நோய்கள் தீரும் .. நிலையான சந்தோஷத்தையும் .. வெற்றியையும் பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் விக்னேஷ்வராய நமஹ !! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED 
' SANKADAHARA CHATHURTHI DAY ' AND THE DIVINE BLESSINGS OF 
LORD GANESHA BRINGS YOU ETERNAL SUCCESS AND FULFILL ALL 
YOUR DESIRES .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "

Swamiye Saranam Iyyappa....Guruve Saranam Saranam.அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதர் ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் பாபாவின் அருட்கடாக்ஷ்மும் .. மனதில் சாந்தியும் அமைதியும் நிலவிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷிர்டி வாஸாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! சாயிகவசம் - பூட்டிமந்திர் வாசா போற்றி ! புண்ணியம் அருளும் நேசா போற்றி ! வாட்டும் துயரம் தீர்ப்பாய் போற்றி ! வளங்கள் நலங்கள் அருள்வாய் போற்றி ! அன்னை தந்தை ஆனாய் போற்றி ! அன்புக் குருவே ! உன்பதம் போற்றி ! உருகும் பக்தர் உணர்வே போற்றி ! உண்மை ஞானஒளியே போற்றி ! திருவாம் உன்பதம் போற்றி ! போற்றி ! தெய்வ வடிவே ! போற்றி ! போற்றி ! சற்குருநாதா சரணம் ! சரணம் ! சச்சிதானந்தா சரணம் ! சரணம் ! அற்புத ஒளியே சரணம் ! சரணம் ! அன்பே அருளே சரணம் ! சரணம் ! நிர்மல அருளே சரணம் ! சரணம் ! பொற்பதம் பணிந்தோம் சரணம் ! சரணம் ! புண்ணியரூபா ! சரணம் சரணம் ! என்றும் எமை காத்தருள்வாய் சாய்நாதரே !! ஓம் சாய் ராம் !! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. PEACE .. AND HAPPINESS .. " OM SAI RAM "


SOME MEMORIES OF MUTHAPPA SWAMY






 

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சதுர்த்தசி திதியும் வருவதால் சிவாலயம் சென்று நடராஜப்பெருமானை வழிபடுவது சிறப்பைத்தரும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகத் திகழ்ந்திடவும் ... இல்லத்தில் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிலவிடமும் பிரார்த்திக்கின்றேன் .. 

நிலம் .. நீர் .. காற்று .. நெருப்பு .. ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உண்டு ..
அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று .. இந்தக்கோயில் ”ஆகாயத்தைக் ” குறிக்கிறது .. 

நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்களே உண்டு .. 
1 - முதல் பூஜை - மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் 
ஆருத்ரா தரிசனமும் .. 
2 - இரண்டாம் பூஜை - மாசிமாதம் சதுர்தசியிலும் ..
3 - மூன்றாம் பூஜை - சித்திரைமாத திருவோணத்திலும் 
4 - நான்காம் பூஜை - ஆனிமாதம் உத்திரத்தில் ஆனிதிருமஞ்சனமும் .. 
5 - ஐந்தாம் பூஜை - ஆவணிமாதம் சதுர்த்தசியிலும் 
6 - ஆறாம் பூஜை - புரட்டாதி மாதம் சதுர்த்தசியிலுமே பூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன .. 

இந்தக் கோவிலில் மற்றுமொரு சிறப்பு - 
சிவன் மற்ற கோவில்களைப் போல் லிங்கவடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார் .. இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒருபாவம் என்று சொல்லலாம் .. 

இங்கு அவர் ஆனந்ததாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு 
பூதத்தை மிதித்துக்கொண்டு .. கையில் தீயுடன் ஒருகையும் ..
காலையும் தூக்கிக்கொண்டு .. ஒருகையில் மத்தளத்தை ஏந்தி 
ஒருவட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர் .. 

நடராஜரைப் போற்றுவோம் ! ஆனந்தமான வாழ்வையும் பெற்றிடுவோம் ! “ ஓம் திருச்சிற்றம்பலம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED SUNDAY
AND MAY YOU BE BLESSED WITH HAPPINESS .. PROSPERITY .. AND GOOD HEALTH .. JAI BHOLE NATH .. OM NAMASHIVAAYA ..

Swamiye saranam Iyyappa..Guruve Saranam




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருவதால் .. “ சனிமஹாபிரதோஷம் “ என்பர் .. 
மாலையில் 4.30 - 6.00 மணிவேளையில் சிவாலயம் சென்று சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு இடையில் தரிசனம் செய்வது சிறப்புதரும்..

தோஷம் - என்றால் குற்றமுடையது என்று பொருள் .. 
பிரதோஷம் - என்றால் குற்றமில்லாதது என்று பொருள் .. எனவே குற்றமற்ற இந்த பொழுதில் ( மாலை 4.30 - 6.00 ) 
இறைவனை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும்

பிரதோஷங்களில் சனிபிரதோஷம் மிகவும் விசேடமானது ஏன்? என்றால் .. 
அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால் சிவபெருமானை தேவர்கள் அனைவரும் மறந்துவிட்டார்கள் .. இந்த தவறை பிரம்மன்
எடுத்துரைத்தார் .. வெட்கி தலைகுனிந்த தேவர்கள் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர் .. மகிழ்ச்சியடைந்த ஈசன் திருநடனம் ( சந்தியா நிருத்தம்) 
புரிந்தார் .. ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை .. எனவேதான் மற்றநாட்களில் வரும் பிரதோஷத்தைவிட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் 
மிகவும் சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படுகிறது .. 

மற்ற பிரதோஷங்களில் உபவாசம் இருக்க இயலாதவர்கள் சனிபிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் நீங்கி சகலநன்மைகளும் 
அடைவார்கள் ..நாம் நமது முந்தைய ஏழுபிறவிகள் .. 
நமது முன்னோர்கள் .. ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமாபாதங்கள் .. அவற்றால் ஏற்பட்ட பாவங்களும் அழிந்துவிடும் .. 

சிவனைப்போற்றுவோம் ! சகலபாவங்களிலிருந்தும் விடுதலை அடைந்து நிம்மதி பெறுவோமாக ! 
“ ஓம் சிவாய நமஹ “ வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING  .. WISH YOU ALL A 
" BLESSED SHANI PRADOSHAM DAY " AND MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS ..
" OM SHIVAAYA NAMAHA " .. JAI BHOLE NATH ..

swamiye saranam iyyappa...Guruve Saranam Saranam....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று .. 
ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் ஸேவித்து வணங்கப்படுகின்ற அன்னையாகிய மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும்
திருவருளும் கிடைத்து .. சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று 
மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் ..

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

இந்த பூமியே ! அன்னைதான் ! ஒவ்வொரு மனிதரிடமும் 
கல்வியாக .. பொன் .. பொருள் என வளர்செல்வமாக .. செஞ்சுரமாக நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக .. 
கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறிவாழ்வில் புகழாக ..
இறைவாழ்வில் நித்திய சாந்தியாக பொலிபவள் அவளே ! அவள்தான் அன்னை மஹாலக்ஷ்மித்தாயே !! 

அனைத்து மங்களையும் அருள்பவளே ! மங்கலியே ! எல்லாச்
செல்வங்களையும் அளிப்பவளே ! நாராயணியே ! கல்யாணியே ! போற்றுகின்றோம் ! ஆயுள் !ஆரோக்கியத்துடன் 
குன்றாத செல்வங்களையும் அனைவருக்கும் அருள்வாயாக !
தாயே ! மஹாலக்ஷ்மியே ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 
MAA LAKSHMI .. MAY SHE BRING BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. 
" JAI MAA LAKSHMI "
மகாமக மகிமை!
மகிமை!

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணிய தலங்களிலேயே வாழ்வோர் செய்த பாவங்கள், காசியில் உள்ள கங்கையில் நீராடினால் மறையும். அந்தக் காசியில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத் தீர்த்தத்தில் நீராடினால் அகலும்! கும்பகோணத்தில் உள்ளோர் செய்த பாவங்கள், கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினாலே அகலும்..’ என்கிறது வடக்கத்திய நூல் ஒன்று. அதனால்தான் காசியில் உள்ளவர்கள்கூட புண்ணியம் தேடுவதற்காகக் கும்பகோணத்துக்கு வருகிறார்கள்.
மதங்களைத் தாண்டி..!

குடந்தையில் 1921-ம் ஆண்டு நடந்த மகாமகப் பெருவிழாவில் சென்னை முஸ்லிம் இளைஞர் சங்கத்தைச் சார்ந்த இருநூறு இளைஞர்கள் வருகை தந்து பொதுமக்களுக்குச் சீரிய தொண்டாற்றி இருக்கிறார்கள். அப்போது, பட்டீஸ்வரத்தில் முகாமிட்டிருந்த மகா பெரியவர் இந்த விஷயம் தெரிந்து அத்தனை முஸ்லிம் இளைஞர்களையும் அழைத்து அகமகிழ்ந்து போனாராம். அதோடு மட்டுமில்லாமல், அவர்கள் அனைவருக்கும் ‘உங்கள் சங்கத்துக்கு ஸ்ரீமடத்தின் அன்புப் பரிசு’ எனச் சொல்லி வெள்ளிக் கோப்பைகளையும் பரிசாக வழங்கினாராம்! 

இள மாமாங்கம்!

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!
அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.

எடைக்கு எடை தங்கம்!

தஞ்சையை அச்சுதப்ப நாயக்கர் ஆண்டபோது, அவரது முதலமைச்சராகப் பணிபுரிந்தவர், கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வாழ்ந்தார். ஒரு சமயம் மன்னருக்கும் அமைச்சருக்கும் திருப்பணி சம்பந்தமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் குளத்தின் அருகில் அமர்ந்திருக்கும் 
ஸ்ரீஆக்ஞா கணபதிக்குத் தீட்சிதர் அபிஷேகம் செய்வதற்காக வைத்திருந்த பாலை மன்னர் தட்டி விட்டுவிட்டார். ஆனாலும், தீட்சிதர் அதைப் பொருட்படுத்தாமல் குளத்திலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்ய, அந்த நீர் பாலாக மாறியது. இந்த அதியசயத்தைக் கண்டு பயந்துபோன மன்னர், கோவிந்த தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், தான் செய்த தவறுக்குப் பரிகாரம் கேட்டார். ‘ஸ்ரீஆக்ஞா கணபதியின் பெயரிலேயே மானியம் எழுதிக் கொடுக்க வேண்டும். தன்னை அவமதித்த குற்றத்துக்கு தன் எடைக்கு எடை பொன் தரவேண்டும்’ என்று கூற... மன்னரும் அவ்வாறே செய்தார். அப்படித் தராசில் உட்கார்ந்து தான் பெற்ற தங்கத்தைக் கொண்டுதான் தீட்சிதர் மகாமகக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள பதினாறு லிங்கங்களுக்கும் கல் மண்டபங்கள் கட்டி, குளத்துக்கும் கற்கள் வைத்து செப்பனிட்டார். தீட்சிதர் தராசில் அமர்ந்த கோலத்தை இன்றும் மண்டபம் ஒன்றில் காணலாம்.
மகான் கோவிந்த தீட்சிதர் வம்சத்தில் வந்தவர்தான் - நமது காஞ்சி மாமுனிவர் பரமாச்சார்ய சுவாமிகள். அதுமட்டுமல்ல. தீட்சிதர் தஞ்சை மன்னனுக்குச் சரிசமமாக, ஒரே ஆசனத்தில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்தவர். தஞ்சை அரசின் முதலமைச்சராக இருந்துகொண்டே அவர் ஆலயங்களைப் பராமரிக்கும் துறையையும் கவனித்துக் கொண்டார். பட்டீஸ்வரம் ஞானாம்பிகை அம்மனிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர், அந்தத் திருக்கோயிலுக்கு அப்போதே திருப்பணி செய்தவர். இன்றும் தீட்சிதர் தன் மனைவியுடன் கைகுவித்த நிலையில் பட்டீஸ்வரம் ஸ்ரீஞானம்பிகை சந்நிதியில் சிலை வடிவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்!



- வி.ராமகிருஷ்ணன் 

** 16.2.92 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.......



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவை வழிபடுவது நன்மையைத் தரும் .. குருவருளும் .. திருவருளும் தங்களனைவரும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பகவானைப் 
பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

“ காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரமில்லை ..
தாய்க்கு சமனான தெய்வமும் இல்லை ..
காசியைவிட சிறந்த தீர்த்தமுமில்லை .. 
ஏகாதசிக்கு நிகரான விரதமுமில்லை “ .. என்பர் .. 

ஏகாதசி விரதத்தை சகலபாவங்களையும் போக்கும் வல்லமை 
கொண்ட விரதம் என்றும் .. அசுவமேதயாகம் செய்தபலனுக்கு சற்றும்குறையாத அளவு பலன் தரும் விரதம் என்பது சான்றோர் கூற்று .. 

மஹாவிஷ்ணுவிற்குப் பிடித்தமான திதி ஏகாதசித் திதியாகும்
நடக்காதகாரியங்கள் அனைத்தும் நடக்கவைப்பது ஏகாதசி
விரதமாகும் ..

பகவானைப் போற்றுவோம் ! சீரும் .. சிறப்பும் .. செல்வாக்கும் .. சகல ஐஸ்வர்யங்களும் தங்கள் இல்லம் தேடிவரும் .. “ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI DAY " .. MAY THE DIVINE BLESSINGS OF LORD VISHNU 
BRINGS YOU ETERNAL BLISS .. " OM NAMO NAARAAYANAAYA "

KUMBAKONAM MAHAMAHAM ...SOME SHOTS






கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு சமம்.குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது. ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்திதினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

Swamiye Saranam iyyappa....Guruve Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவரது மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் -
குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயின எல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு
கொண்டேன் நாராயணாவென்னும் நாமம் !! (திருமங்கையாழ்வார் )

பொருள் -
நல்லகுலத்தில் பிறக்கச்செய்வதும் .. செல்வங்களை அள்ளித்தருவதும் .. தன் அடியார்கள் படும் துன்பங்களை எல்லாம் போக்குவதும் .. பெரிய தேவலோகப் பதவிகளைத்
தருவதும் .. இந்த உலகை எல்லாம் ஆளவைப்பதும் .. இன்னும்
வேண்டுவன எல்லாம் தருவதும் .. பெற்றதாயினும் மேலாக
அன்பைப் பொழிவதும் .. முக்தியைக் கொடுக்கக்கூடியதுமான
“ நாராயணா “ என்னும் திருநாமத்தை அறிந்துகொண்டேன் ..

அடியவர்களின் துன்பங்களைக் களைந்து .. பாவங்களைப்போக்கி .. ஓர் குழந்தையைப் போல் நம்மை அரவணைக்கும் திருமாலின் திவ்விய பாதக்கமலங்களில்
சரணடைவோமாக ! ஓம் நமோ நாராயணாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. 
MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS AND HAPPINESS IN YOUR LIFE .. " OM NAMO NAARAAYANAAYA "


கும்பகோணத்தில் நேற்று தொடங்கிய மகாமகப் பெருவிழாவையொட்டி மகாமகக் குளத்தில் புனித நீராடிய திரளான பக்தர்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுக ளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கொடியேற் றத்துடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
மாசி மாதத்தில் குரு சிம்ம ராசி யிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும்போது முழு நிலா நாளில் மக நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடி வரும் நாளே மகாமகத் திருநாள் எனப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி எனப்படும் புனித நீராடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 12 ஆண்டு களுக்குப் பிறகு மகாமகத் தீர்த்தவாரி பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற் றது. இதேபோன்று, சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழ சோமேஸ்வரர், பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர், ஞானாம்பிகை உடனாய காளஹஸ்தீஸ்வரர், அமுதவள்ளி உடனாய அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் பகல் 12.40 மணிக்கு கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாக்கோட்டை க.அன்பழகன், ரங்கசாமி, துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் க.பாஸ்கரன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், தருமபுரம் ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், திருவாடுவதுறை ஆதீனகர்த்தகர் அம்பலவாண தேசிக பரமாச்சாரியர், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகல் 1.30 மணியளவில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்ட உற்சவருக்கு மயிலாடுதுறை சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் மங்கள பூஜை, கங்காபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டு, 101 வேதவிற்பன் னர்கள் வேத கோஷங்களை முழங்க, மகாமகக் குளத்தில் அமைச்சர்கள், ஆதீனகர்த்தகர்கள் புனித நீராடினர்.
நேற்று காலை முதல் மாலை வரை 50,000 பக்தர்கள் நீராடியதாக தெரிவிக்கப்பட்டது.
மகாமகப் பெருவிழா கொடி யேற்றத்துக்குப் பிறகு மகாமகக் குளத்தில் ஆதீனகர்த்தகர்கள் புனித நீராடி, தீர்த்தமாடல் நிகழ்வை பகல் 1.30 மணியளவில் தொடங்கிவைத்தனர்.
முன்னதாக, விசாலாட்சி உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயிலில் பகல் 12.30 மணியளவில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஜெயந்திரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் மகாமக தீர்த்தக் குளத்தில் நீராடினார். பின்னர் அவர் கூறியபோது, “மனித வாழ்வில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்களை இந்த குளத்தில் நீராடி போக்கிக் கொள்ளலாம்” என்றார்.
6 சிவன் கோயில்களில் கொடியேற்றம்: வைணவத் தலங்களில் இன்று கொடியேற்றம்
கும்பகோணம் சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் 10 நாள் மகாமக உற்சவம் நேற்று தொடங்கியது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கும்பகோணத்தில் இவ்வாண்டு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இன்று (பிப்ரவரி 14) வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராம சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 5 கோயில்களில் மகாமகப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற உள்ளது.
மகாமகத்தையொட்டி 10 நாட்கள் நடைபெறும் உற்சவங்களின்போது, காலை, மாலை என இருவேளைகளிலும் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். இந்த 10 நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நேற்று நடைபெற்ற ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் 4-ம் திருநாளான பிப்ரவரி 16-ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற உள்ளது. 5-ம் திருநாளன்று (பிப்ரவரி 17) ஓலைச்சப்பரம் நடைபெற உள்ளது.
3 மகாமகத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா...
தமிழக முதல்வர் ஜெயல லிதா மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறும் நாளும் அவரது பிறந்த நட்சத்திர நாளேயாகும்.
முதல் முறை ஜெயலலிதா முதல்வரான பிறகு 1992-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகப் பெருவிழாவில் பங்கேற்றார். அதன்பின் 2004-ம் ஆண்டு மகாமகத்தின்போது முதல் வராக ஜெயலலிதா இருந்தார். தற்போது 2016-ம் ஆண்டு நடைபெறும் மகாமகத்தின் போதும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிறந்த பிறகு நடைபெறும் 6-வது மகாமகம் இது. இதில் 1992, 2004, 2016 ஆகிய 3 மகாமகங்களின்போது அவரே தமிழக முதல்வர். தமிழக முதல்வர்களில் 3 மகாமகங்களின் போது முதல்வராக இருந்த சிறப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
அதிகாரிகள் ஆய்வு
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப் பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முகமணி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.பாஸ்கரன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் பனீந்திரரெட்டி ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கும்பகோணம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் ஆகியோருடன் ஆய்வு மேற் கொண்டனர்.
மகாமகக் குளத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக இரண்டரை அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மேலும், அரசலாற்றிலிருந்தும், நகராட்சியின் ஆழ்குழாய் பம்புசெட் வாயிலாகவும் தண்ணீர் விடும் பணிகளை பொதுப்பணித் துறையின் காவிரி கோட்ட தலைமைப் பொறியாளர் அசோகன் நேற்று ஆய்வு செய்தார்.
மகாமகக் குளத்தில் நீராடிய மத்திய அமைச்சர், பிரபலங்கள்
கும்பகோணத்தில் நேற்று தொடங்கிய மகாமகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்களுடன் பிரபலங்களும் நீராடினர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து மகாமகக் குளத்தில் இறங்கி, தலையில் நீரை தெளித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது சகோதரர்களுடனும், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன் உள்ளிட்ட பலரும் மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர் களிடம் கூறியபோது, “கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதியை தமிழக அரசு, தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மகாமக குளத்தில் நீராடி வாழ்க்கையை பொதுமக்கள் இன்பமயமாக வாழ வேண்டும். இந்த விழாவின் மகிமையை உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை அறிந்து மத்திய அரசு மகாமகத் திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
விழாத் துளிகள்…
அதிகாலை முதலே...
சிவன் கோயில்களில் கொடியேற்றிய பின்னரே மகாமகக் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தும் நேற்று அதிகாலை முதல் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் மகாமக குளத்தில் நீராட பக்தர்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கெடுபிடி இல்லாமல் குளத்தில் இறங்கி ஒவ்வொரு தீர்த்த கிணறுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் நீராடினர்.
அதிகரித்த செல்பி…
காமகக் குளத்தில் பக்தர்கள் நீராடுவதை தங்களுடைய செல்போன்களில் புகைப்படம் எடுப்பதும், பலர் குளத்துடன் செல்பி எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர். குளத்தில் இரண்டரை அடி தண்ணீர் மட்டுமே இருந்தால் ஏராளமான சிறுவர்கள் உற்சாகமாக தண்ணீரில் துள்ளிக் குதித்து விளையாடினர்.
உள்ளூர் மக்கள் அவதி…
காமகப் பெருவிழாவுக்கு நேற்று காலை முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர். குளத்தின் கரை பகுதியில் கூட்டம் குறைவாக இருந்தபோதிலும் காலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்காததால் உள்ளூர் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். உள்ளீக்கான் சந்தில் காலை முதல் மாலை வரை இரும்புத் தடுப்புகளை கொண்டு சாலையை அடைத்ததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
கொடியேற்றத்தில் நெரிசல்…
திகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றபோது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாதுகாக்கும் பணியில் மட்டுமே போலீஸார் ஈடுபட்டனர். மாறாக கோயிலுக்குள் செல்லும் வழியில் பாதுகாப்புக்கு ஒரு போலீஸார் கூட இல்லாததால் மக்கள் கோயிலுக்குள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் முடியாமல் நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
வாசலில் ஆதீனகர்த்தர்கள்…
திகும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துக்கு பகல் 12.30 மணிக்கு மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர்கள் மேளதாளம் முழங்க வந்தனர். ஆனால், அவர்களால் கூட்ட நெரிசலைக் கடந்து கொடிமரம் அருகே செல்ல முடியவில்லை. இதனால் வாசலிலேயே ஆதீனகர்த்தர்கள் நின்று கொடியேற்றத்தை தரிசித்தனர்.
தன்னார்வலர்களுக்கு உதவி தேவை
காமகக் குளத்தில் நீராடிய பின்னர், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்துதரப்படவில்லை என தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்” என்றார்.
மகாமகக் கோயில்களில் இன்று…
* மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா- இரண்டாம் திருநாள் - வெள்ளிப் பல்லக்கு உலா, காலை 8, சுவாமி, அம்பாள் சேஷ வாகனம், இரவு 7.
* சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: மாசி மக பிரம்மோற்சவம்- பல்லக்கு, காலை 8, இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 7.
* ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்: மாசிமக பிரம்மோற்சவ விழா- இரண்டாம் நாள் - பல்லக்கு, காலை 8, சேஷ வாகனம், கமல வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, மாலை 6.
* பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: மகாமகப் பெருவிழா- சூரியப் பிரபை, சந்திர பிரபை, இரவு 7.
* விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: மகாமகப் பெருவிழா - பல்லக்கு, காலை 8, சேஷ வாகனம், இரவு 7.
* ராஜகோபால சுவாமி கோயில்: மகாமக விழா- முதல் திருநாள் - கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.
* சக்கரபாணி சுவாமி கோயில்: மாசிமகப் பெருவிழா- ரதசப்தமி உள்புறப்பாடு, காலை 7, கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானம், இரவு 7.
* சாரங்கபாணி கோயில்: மகாமகப் பெருவிழா- பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளுதல், கொடியேற்றம், காலை 8.45, தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு, இரவு 7.
* ராம சுவாமி கோயில்: மகாமகப் பெருவிழா - கொடியேற்றம், காலை 8.45, இந்திர விமானம், இரவு 7.