அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் சிறப்பான விரதங்களுள் ஒன்று .. 
“ சோமவார விரதமாகும் “ இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இவ்விரதம்
கடைபிடிக்கப்படுகிறது .. க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி
சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் .. சந்திரனுக்கு சிவபெருமான் அருள்புரிந்ததுடன் தன் தலையிலும் சூடிக்கொண்டார் .. சந்திரனின் மனைவி ரோகிணியும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் ..அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்தவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் ..

சோமவாரத்தன்று விரதமிருந்து பலன்பெற்ற ஒரு புராணக்கதை --
சந்திரவர்மன் என்ற மன்னனுக்கு அழகிய பெண்மகவு பிறந்தது
அவளுக்கு ” மந்தினி “ என்று நாமம் சூட்டப்பட்டது .. அவளது ஜாதகத்தைக் கணித்தவர்கள் சிறுவயதிலேயே தனது கணவனை இழந்துவிடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று
கூறினார்கள் ..

அதனால் மன்னரும் யாக்யவல்லியர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி முறையாக சோமவாரவிரதத்தைக் கடைப்பிடித்தாள் ..சோமவாரவிரதத்தன்று அதிகாலை நீராடி
நாள்முழுவதும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை
இடைவிடாது ஜபித்து .. உபவாசமிருந்து மாலையில்
எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ..ஆராதனைகள் செய்து
வழிபட்டு வரலானாள் ..

அவளுக்கு நளமகாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது .. அவர்கள் யமுனைநதியில் நீராடும்போது நீர்சுழலில் சிக்கி அவன்மூழ்க
நேர்ந்தது .. ஆயினும் ’ மந்தினி ‘ அனுசரித்த சோமவார விரதத்தின் பலனால் நாககன்னியர் அவனைக் காப்பாற்றினர்

இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும்வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம் ..சிவனைப்போற்றுவோம்!
அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! ஓம் நமசிவாய !

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED
' SOMVAR DAY ' AND MAY LORD SHIVA REMOVE ALL YOUR SINS AND BLESS YOU WITH HAPPINESS .. GOOD HEALTH AND PROSPERITY ..
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

No comments:

Post a Comment