அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையும் .. விசாகநட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்றைய நாள் கலியுகவரதனாம் கந்தப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் .. ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பைத் தரும் ..
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத் புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
“ வேலுண்டு வினையில்லை .. மயிலுண்டு பயமில்லை ..
சேவலுண்டு ஏவலில்லை .. குகனுண்டு குறைவேயில்லை “
முருகனுக்குரிய “ வேலும் மயிலும் “ என்ற தமிழ்மந்திரத்தில்
மயில் இடம் பெற்றுள்ளது .. ” வேலுண்டு வினையில்லை ..
மயிலுண்டு பயமில்லை “ என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு .. வேதங்களே மயிலாகி ஞானவடிவேலவனைத்
தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம்குறிப்பிடுகிறது ..
முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கை போன்று
ஆறாக அருள்மழைபெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து ..
“ குகமயமாக ஸர்வம் குஹமயம் ஜகத் “ என வழிபடவேண்டும்
எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்ந்து ஒன்றாகத் திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும் .. ஆலயங்களுக்குச் சென்று வணங்கும்பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்துபோய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள்
குறிப்பிட்டுள்ளார் ..
கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து காரியங்களிலும் வெற்றி
காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் சரவணபவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM MURUGA "
No comments:
Post a Comment