"வளர்பிறை அஷ்டமி" ; 15-3-16..." பைரவ பூஜை".
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. 
சிவ வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

சிவபெருமானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று. சனிபக வானின் குரு.. பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரத்தில் 64 வகைகள் உண்டு. பைரவரின் திருவுருவத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

பைரவரின் திருவுருவத்தில்....
தலையில் மேஷ இராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முகங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

27 நட்சத்திரங்களுக்கும் உரிய, சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவரை வணங்க வேண்டி செல்ல வேண்டிய ஸ்தலங்கள்.

27 நட்சத்திரங்கள் பெயர் மற்றும் 
பைரவர் அருள்தரும் தலங்களின் பெயர்கள்.

1. அசுவினி... ஞானபைரவர் பேரூர்
2. பரணி.... மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை... அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி.... பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம்... க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை... வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம்.... விஜய பைரவர் பழனி
8. பூசம்... ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம்.... பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம்... நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம்... பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம்... ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம்... யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை... சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி.... ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம்... கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம்... சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை... கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம்... சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம்... வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம்... முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம்... பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம்... மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம்... சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி... அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி... வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி... சம்ஹார பைரவர்
தாத்தையங்கார்பேட்டை.

ஒவ்வொரு நட்சத்திரதாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவ மூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள். மேலும் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. 

“ஓம் பைரவாய நமஹ” 

(மந்திர சுலோகங்களுக்கு விளக்கம் தெரியாமல் மந்திரம் சொல்லி வணங்குதல் ஆகாது என்பதால் பைரவரை வணங்கும் போது இம்மந்திரத்தை 108 முறை சொல்லி மனதிற்குள் தியானித்தாலே போதும். பைரவர் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.)

ஓம் பைரவாய நமஹ

No comments:

Post a Comment