அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று 
“ காரடையான் நோன்பு “ மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் 
பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக நோற்கும் நோன்பாகும் .. 

சாவித்ரி தன் கணவனான சத்யவானை எமதர்மராஜனிடமிருந்து மீட்டது இந்நாளில் தான் .. சுமங்கலிப்பெண்கள் தங்கள் கழுத்தில் 

மங்கலநாண் நிலைக்கவும் .. தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்பதற்காகவும் சாவித்ரி அம்மனை வேண்டி நோற்கும் நோன்பாகும் .. 

தோரம் கருண் ஹாமி ஸுபஹே !
ஸஹாரிதரம் தாரம்யஹம் பர்து !
ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா !! 

பொருள் -
அன்னையே ! எனது கணவனின் நீண்ட ஆயுளைக்கருதி மஞ்சள்
கயிற்றினை ( சரடை ) கழுத்தில் கட்டிக்கொள்கிறேன் ! நீ சந்தோஷத்துடன் இருந்து அருள்புரிவாயாக ! 
எனும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ளும் நோன்பு .. மஹா உன்னதமான விரதமாகும் .. 

“ மாசிக்கயிறு பாசிபடியும் “ ( விருத்தியாகும் ) என்பர் .. 
‘ உருகாத வெண்ணெயும் .. ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன் .. ஒருநாளும் என் கணவன் என்னைப் பிரியாமல் 
இருக்கவேண்டும் ‘ அருள்புரிவாயாக ’ என்று ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணும் அன்னை காமாக்ஷியிடம் வேண்டி மூத்தபெண்கள் இளையபெண்களுக்கு சரடை கட்டிவிடவேண்டும் .. பின் தானும் கட்டிக்கொள்வர் .. 

சாவித்ரியின் வரலாற்றினை அறிந்தோ .. கேட்டோ .. படித்தோ வரின் கணவரின் ஆயுளும் .. ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது கூற்று .. 

பதிபக்தியில் சிறந்துவிளங்கிய சாவித்ரி தன் விரதபலத்தாலும் ..
கற்பின் மஹிமையாலும் .. யாராலும் காணமுடியாத யமனைக்கண்டு உரையாடி அவரது பாராட்டுகள் .. வரங்களைப் பெற்று நலம்பெற்றவரலாறு .. “ சத்தியவான் சாவித்ரி வரலாறு “ 

சாவித்ரி சத்யவான் திருமணமாகி ஒருவருட காலமே உயிருடன் இருப்பான் என்பதை அறிந்தும் அவனையே மணப்பேன் என்ற உறுதியுடன் அவனை மணந்து திருமணத்திற்குப்பின் மாமனார் .. மாமியார் .. கணவன் ஆகியோருடன் காட்டுவாழ்க்கை மேற்கொண்டு பணிவிடைகள் செய்து போற்றி மனநிறைவுடன்
வாழ்ந்துவந்தாள் .. மாங்கல்யபலம் வேண்டி விரதங்கள் .. நோன்புகள் அனைத்தையும் முறைப்படி அனுஷ்டித்தாள் .. 

சத்தியவானின் ஆயுள்காலம் முடியும் நேரம் வந்தபோது அவனது உயிரை எடுக்க கையில் பாசக்கயிற்றுடன் கரிய உருவம் ஒன்று வந்தது .. அது யமன் என்றறிந்த சாவித்ரி யமனை நமஸ்கரிக்க .. யமனும் அவளை “ தீர்க்கசுமங்கலி பவ “ 
என்று ஆசீர்வதித்தார் .. 

சத்யவானின் உயிரை எடுத்துச்சென்ற யமனை சாவித்ரி பின் தொடர்ந்து சென்று அவனுடன் அறிவுபூர்வமாக வாதாடி யமன்
தடுத்தபோதும் கேளாமல் சத்தியவானின் உயிரைத்தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்ற யமனிடம் மாமனார் மாமியார் குறித்து வரம்கேட்ட சாவித்திரி .. 
” என் கற்புநிலை பழுதுபடாமல் எனக்கு நூறுபுத்திரர்களைக் கொடு “ என்று சாமார்த்தியமான ஒருவார்த்தைக் கேட்டுப் பெற்றாள் .. சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றறிந்த யமனும் அவளிடம் தோல்வியுற்று சத்யவானின் உயிரையும் விடுவித்தார் ..

என்றும் தீர்க்கசுமங்கலிவரம் அருளும் அன்னை காமாக்ஷியைப்
போற்றி அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! 
ஓம் சக்தி ஓம் ! “ தீர்க்கசுமங்கலி பவ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" KARADAYAN NONBU " WITH THE BLESSINGS OF GODDESS MAA SHAKTHI .. THIS NONBU IS CELEBRATED IN HONOUR OF SAVITHRI 'S SUCCESS IN BRINGING BACK HER HUSBAND SATHYAVAN'S LIFE FROM
THE HANDS OF YAMADEV .. THE GOD OF DEATH .. THE RITUAL IS KNOWN AS " SAVITRI NONBU " .. " DHEERGA SOWMANGALYAM
"

No comments:

Post a Comment