PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
SADURTI AND EASTER SUNDAY TOO .. MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND PROSPEROUS .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் மற்றும் அனைத்து கிறிஸ்தவ அன்புள்ளங்களுக்கும் எங்கள் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .. 

அங்கிங்கெனாதபடி .. எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்கும் ஸ்ரீவிநாயகரைத் துதித்து தடங்கல்கள் அனைத்தும் தகர்த்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரத தினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் .. பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய “ சங்கடஹர சதுர்த்தியாகிய “ இன்று விரதம் இருந்தால் அனைத்து சங்கடங்களும் தீர்ந்து வாழ்வில் அளவுகடந்த ஆனந்தத்தையும் .. சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் .. 

“ ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே “ சங்கடஹர சதுர்த்தியாகும் “ .. 
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக 
வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு 
உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும் .. 

சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு .. என பலவிதமான
நன்மைகளை அடையமுடியும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் .. 

விரதம் இருப்பது எப்படி ..
சங்கடஹரசதுர்த்தியன்று அதிகாலை நீராடி பால் பழம் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன்
நினைவோடு உபவாசம் இருந்து மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்ள வேண்டும் .. ஆலயத்தை
எட்டுமுறை வலம்வந்து விநாயகர் அகவலையும் பாராயணம் செய்தல் நலம் .. வீட்டிற்குவந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும் .. 

சங்கடஹர சதுர்த்தியின் மஹிமை - 
காட்டில் தருமபுத்திரன் இவ்விரதத்தை மேற்கொண்டார் ..
பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்
முதல்முதலில் தன் தாய் பார்வதிதேவிக்குக் கணபதியே 
இவ்விரதத்தைச் சொல்லி அருளினார் .. அன்னையும் ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் ..
இந்திரன் .. சிவன் .. இராவணன் .. போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர் .. 
அனுமன் சீதையைக் கண்டது ..
தமயந்தி நளனை அடைந்தது ..
அகலிகை கௌதமரை அடைந்தது .. போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மஹிமையால்தான் .. என முருகப்பெருமானே முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று நிம்மதி பெறுவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment