
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் மதியம் முதல் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..
வைகாசிமாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியை
“ மோகினி ஏகாதசி “ என்றழைப்பர் .. இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் அனைவரது சகல பாபங்களும் .. துக்கங்களும் அழிக்கப்படுகிறது .. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர் ..
இவ்விரத மஹாத்மியத்தை கேட்பவரும் .. படிப்பவரும் கூட ஓராயிரம் பசுதானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தையும் பெறுவர் ..
மனிதர்கள் எப்போதும் நற்சிந்தனையுள்ள சான்றோர்கள் .. சாதுக்கள் ஆகியோரிடமும் நட்பு கொண்டிருத்தல் வேண்டும் .. நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்ல அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும் ..
கெட்டசகவாசம் அதனால் விளையும் பாபவினைகள் ஒருவரை நரகத்திற்கு மட்டுமே இழுத்துச் செல்லும் .. அத்தைகய நட்பு துன்பம்வரும் காலங்களில் கைவிட்டு விலகிவிடுவதால் அனாதையாக தவிக்க நேரிடுகிறது .. அப்போதும் யாராவது ஓர் சான்றோர் நம்மை கைவிடாது நன்மார்கத்தை கூறி அருளுவர் .. இதுவே இந்த ஏகாதசியின் மஹிமை .. கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகள் யாவற்றையும் நீக்குவோமாக !
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment