PANVEL BALAGAN PATHAM POTRI.....GURUVIN PADHARA VINDHANGALE POTRI POTRI...SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD LUCK .. GOOD FORTUNE .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமும் ஆகும் .. தங்களனைவரது வல்வினைகளை நீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் .. அழகும் .. அறிவும் தந்து தங்கள் வாழ்வை மிளிரச்செய்யும்
வள்ளிமணாளனை போற்றித் துதிக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முஹ ப்ரசோதயாத் !! 

செவ்வாய்க்கிழமை ஆறுமுகக்கடவுளுக்கு உகந்த நாளாகும் .. கிரகங்களில் அங்காரகன் என்பதே செவ்வாய் என்றழைக்கப்படுகிறது .. அங்காரகனின் அதிபதி முருகப்பெருமானே ! அங்காரகனால் ஏற்படும் அனைத்து கிரகதோஷங்களை நீக்கவேண்டுமானால் செவ்விதழோன் ஆறுமுகனை வழிபாடு செய்தல் நலமே ! 

ஆறுமுகம் உடையவன் ஷண்முகன் .. கணேஷ .. சிவ .. சக்தி .. ஸ்கந்த .. விஷ்ணு .. சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன் .. அதாவது .
மு - என்றால் விஷ்ணு ..
ரு - என்றால் ருத்ரன் ..
கு - என்றால் கமலத்தில் உதித்தவன் .. அதாவது பிரம்மன் 

முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர் .. முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் .. ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர் .. அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தவர் .. சூரணை சம்ஹாரம் செய்து பின்
மஹாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர் .. இவ்வாறு முருகன் மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார் .. 

இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஆவணி .. மாசி மாத திருவிழாவின் போது .. சிவன் .. விஷ்ணு .. பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார் .. 

முருகன் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார் .. 
வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார் .. 
பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார் .. 

புன்சிரிப்பிலே பன்வேல் பாலகனாக காட்சி அளிக்கிறார்...
 

சொல்லில் அடங்காத் திருப்புகழ் கொண்டவனே ! உள்ளம் ஒன்றி வழிபடுபவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே ! திக்கற்றவர்களுக்கு துணைநிற்கும் திருமுருகனே ! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே ! நம்வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தெம்மை காத்தருள்வாயாக !! 

“ ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரவணபவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment