SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'PRADOSHAM DAY ' AND MAY LORD SHIVA REMOVE ALL YOUR SINS AND SHOWER YOU WITH PEACE .. SUCCESS .. AND FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM NAMASHIVAAYA " 
JAI SHREE SHIV BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சகலமங்களங்களையும் தங்களனைவருக்கும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று .. பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது சாலச்சிறந்ததே ! 
ஈசனின் அருள்பெற்று அனைத்து துன்பங்களும் நீங்கி .. மனநலமும் .. உடலாரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. பரமேஷ்வரனைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷகாலத்தில் எம்பெருமானை 
( மாலை 4.30 - 6.00 மணிவரை ) ஆலயம் சென்று வணங்குவது சிறந்தபயனைத் தரும் .. 

தோஷம் - என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள் .. 
பிரதோஷம் - என்றால் குற்றமற்றது என்று பொருள் .. 
குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டோமேயானால் .. நாம்செய்த சகலபாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .. 

பிரதோஷபூஜை ஸ்தோத்திரம் - - - 
1 - ஓம் பவாய நமஹ - பகவானே எம்மைக் காத்தருள்வாயாக .. 
2 - ஓம் ருத்ராய நமஹ - நம்குற்றங்களைச் சிந்தனைகளிருந்தும் களைவாயாக .. 
3 - ஓம் மிருடாய நமஹ - நம்துன்பங்களைப் போக்கி .. இன்பங்கள் தந்தருள்வாயாக .. 
4 - ஓம் ஈசானாய நமஹ - நல்வழி .. நற்புகழ் பெறுவதற்கு வழிகாட்டுவாயாக .. 
5 - ஓம் சம்பவே நமஹ - எமக்கு உயர்வு அடைய வழிகாட்டுவாயாக .. 
6 - ஓம் சர்வாய நமஹ - கொடியவர்களை தண்டித்து எம்மைக் காத்தருள்வாயாக .. 
7 - ஓம் ஸ்தாணவே நமஹ - பகவான் சிறிதும் அசைவின்றி நிலைபெற்றிருப்பவராக .. 
8 - ஓம் உக்ராய நமஹ - ஆசை .. பாசம் .. எதிலும் நிலையான ஆட்சி செய்பவராக .. 
9 - ஓம் பார்க்காய நமஹ - பகவானின் சிறப்பான உருவம் தந்தருள்வாயாக .. 
10 - ஓம் பரமேஷ்வராய நமஹ - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதலாக .. 

எங்கும் இருக்கும் .. எதிலும் நிறையும் பரமேஷ்வரனைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment