பாலகரின் பல்வேறு பரிநாமங்கள்.....


பன்வேல் பாலகன் 
புனே வந்தது ஏன்?

பஞ்சாபகேசன் இல்லம் புகுந்தது ஏன்?
பட்டு படோடபத்துடன் பரிணமளிப்பது ஏன்?

விடைகள் ஒன்றுதான் கேள்விகள் பல உண்டு..

அனுகிரஹ பூஜையிலே
அவன் இன்றி அணுக்ரகம் யார் தருவார்

நீல நிற பட்டுடன்
நேர்த்தியான மலருடன் 

ரோஜாவின் அரவணைப்பு
மல்லிகையின் மணம் மணக்க 

இருபக்கமும் இருமுடி பையுடன் 
இழுக்கும் அவன் அலங்காரம்

சுடரின் ஒளியிலே
சுட்டி இழுக்கும் அவன் அருள் பார்வை 


சுடர் விடும் கணபதி ..சக்தி ..அய்யனின் 
பாதுகாப்பு காவலனாய் 
புஷ்பங்கள் அணிவகுத்து 
அரவணைத்து நிற்பது  


அய்யனின் அலங்காரம்
அவரின் கைவண்ணம் 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது
அவரின்றி அலங்காரம் அமையாது 

அவரே நம் குருநாதன் 
அவன் அலங்காரத்தின் கருநாதன்

கருவை சுமக்கும் தாய்போல
நம் கருமங்களை கரை சேர்க்கும் தாய் அவர் 

நம் குருநாதன்
புகழ் பாட ஒரு நாவு பத்தாது 

பணிந்திடுவோம் அவர் பாதம்
பாடிடுவோம் பாலகன் புகழ் எந்நாளும்..










No comments:

Post a Comment