SWAMI SARANAM...GURUVE SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE DIVINE " KAAMIKA EKADASI DAY " AND MAY 
LORD VISHNU REMOVE ALL YOUR SINS & DESTROY ALL NEGATIVE FORCES AND FILLS YOUR HEART WITH DIVINE LIGHT & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பது சாலச்சிறந்தது தாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களும் நீங்கி அவரவரது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப்பெறுவர் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசியை “ காமிகா ஏகாதசி “ என்றழைப்பர் .. தனி துளசியால மஹாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய ஸ்வர்ணத்தை தானம்செய்தபலன் கிட்டும் .. அத்தோடு நெய்தீபம் ஏற்றுவது .. தீபதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரவல்லது .. 

பகவான் நாமசங்கீர்த்தனத்துடனும் விரதம் அனுஷ்டிப்போரது மனக்கவலைகள் நீங்கும் .. உயர்ந்த ஆன்மீகநிலையினை அடைவர் .. காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும்விட மிகவும் பவித்ரமான நாளாகும் .. ஆகையால் இன்று விரதம்மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது .. மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கின்றதோ அதேபோல் அவர்களது பாபங்கள் தீண்டாமல் வாழ்வர் .. 

மஹாவிஷ்ணுவின் மஹிமையை விளக்கும் புராணங்கள் .. பக்தி இலக்கியங்களை பாராயணம் செய்வோர் அஸ்வமேதயாகம் நடத்திய பலனையும் .. யமதர்மராஜனின் கோபத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்கள் .. 

இன்று எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால்
( நல்லெண்ணை ) விளக்கேற்றி ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கின்றாரோ அவர் தன் பாபங்களிலிருந்தும் விடுதலை பெற்று முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை அதிபிரகாசமான விளக்குகளுக்கு சமனான பிரகாசமான உடலுடன் அடைவர் .. 

பாவங்களை நீக்கி எண்ணிலடங்காத பலன்களை வழங்கும் “ காமிகா ஏகாதசியில் “ பகவானைப் போற்றி அவர் திவ்யபாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment