SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


 GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL PAINS & SINS AND SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. 
' JAI BHOLE NATH ' 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையான இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் பிரதோஷவேளையாகிய மாலை 4.30 - 6.00 மணிவர
ையிலான நேரத்தில் ஆலயம் சென்று 
“ சிவாயநமஹ “ எனச்சொல்லி நம்சிறுமனதை சிதறாமல் கட்டி .. சிவனருளே ! எல்லாமென சிந்தையில்வைத்து .. சிவனே ! உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவசிவா ! நம்முள்ளே கலந்தருள்வாயாக ! என மொழிந்து நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு ஊடாக சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு தரிசித்தால் தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து .. மனநிம்மதி கிட்டும் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று .. பிரதோஷ வழிபாடு சகலசௌபாக்கியங்களையும்
தரவல்லது .. தேவர்களும் .. அசுரர்களும் போட்டிபோட்டு
பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து பொங்கிவந்த ஆலகால விஷத்தை தானுண்டு மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்தவேளையே
பிரதோஷ காலமாகும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரை ) 

பிரதோஷ புண்ணியவேளையில் சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் வணங்கி .. வழிபட்டு .. பெரும்பேறு பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment