PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE " UPA KARMA " WISHES TOO .. THE PERSON WHO RUGULARLY RECITES GAYATRI MANTRA ATTAINS LIBERATION FROM THE FEARS OF DISEASE AND DEATH .. " JAI MATA DI "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் ஆவணி அவிட்டமும் வருவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. அன்னை காயத்ரிதேவியின் அருட்கடாக்ஷ்மும் பெற்று வளமான வாழ்வு மலர்ந்திட ஸ்ரீஹயக்ரீவரையும் பிரார்த்திக்கின்றேன் ..
ஞானாநந்தமயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் !
ஆதாரம் சர்வவித்யானம் 
ஸ்ரீஹயக்ரீவம் உபாஸ்மஹே !
இந்நன்னாளில் அனைத்து பெரியவர்களுக்கும் எனது குருநாதருக்கும் எனது பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ..
ஆவணிமாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது .. இந்தநாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு புதியபூணூலை அணிந்துகொள்வர் .. இதை குருமுகமாகத்தான் செய்யவேண்டும் .. வீட்டில் குருக்களை வைத்து காயத்ரிமந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள் .. இப்போதெல்லாம் சிறுகுழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை குழுக்களாகக் கோவிலுக்குச் சென்று அனைவரும் குருக்கள் உதவியுடன் புதியபூணூல் அணிந்துகொள்கின்றனர் ..
மூன்றுவயதுமுதல் ஐந்துவயதிற்குள் ஆண்குழந்தைகள் குருமுகமாக காயத்ரிமந்திரம் ஓதி குழந்தையை தந்தைமடிமீது அமரவைத்து முதன்முதலாகப் புதியபூணூல் போட்டுவிடுவார்கள் .. இதை ஒரு திருமணவிழாபோலவே கொண்டாடுவார்கள் .. இதற்கு 
“ உபநயனம் “ என்று பெயர் ..
உபநயனம் செய்து பூணூலை அணிந்துகொண்டபின் தினமும் காயத்ரி ஜபத்தை மூன்றுமுறை தவறாமல் ஓதவேண்டும் .. வருடம் ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிந்து கொள்ளவேண்டும் ..
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித்தரும் ஜபம்-
ஓம் பூர் புவஸ்ஸுவ !
தத்ஸவி துர்வரேண்யம் !
பர்கோ தேவஸ்ய தீமஹி !
தியோ யோநஹ் ப்ரசோதயாத் !!
இம்மந்திரத்தை தினம் மூன்றுவேளை கைமேல் துணிபோட்டு மூடி 108 .. 1008 முறை ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும் ..
இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும் .. மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது .. வேதங்களின் தாய் காயத்ரி .. இந்தமந்திரம் வேதமந்திரங்களில் சிரேஷ்டமானது .. இதுபாவங்களைப்
போக்கும் .. நல்லாரோக்கியம் .. அழகு .. பலம் .. வீர்யம் .. பிரும்மதேஜஸ் முதலானவற்றைத் தருகிறது .. மனதைப்
பரிசுத்தப்படுத்துகிறது .. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமாசித்திகளைக் கொடுக்கிறது .. சக்திமானாகவும்
புத்திமானாகவும் ஆக்குகிறது ..
கீதையில் கண்ணன் ” மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் “ என்று கூறியுள்ளார் .. மஹாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து தோன்றிய மந்திரமாகும் .. காயத்ரிக்கு மூன்றுகண்கள் .. 
ஐந்துமுகங்கள் .. 
பத்துகரங்கள் உண்டு .. 
வாகனம் - அன்னம் ..
சிவன்போல ஆக்கல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் ..
அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்துமுகங்களும் செய்கின்றன .. 
சரஸ்வதி .. லக்ஷ்மி .. பார்வதி .. மகேஸ்வரி .. மனோன்மணி என்ற ஐந்துசக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்துமுகங்கள் ..
விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டு அதன்பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக்கூறப்படுகிறது .. காயத்ரிமந்திரத்தை 27முறை ஜபித்தல் நலம் .. ஜபிக்கும்போது ஒழுக்கநெறியோடும் .. உள்ளத்தூய்மையோடும் செய்யவேண்டும் .. அப்படிச்செய்வதால் விரும்பியபலனை அடையலாம் ..விரும்பியலோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம் ..
எல்லாவற்றிற்கும் மேலாக இந்ததினத்தில் வேதாரம்பம் என்பதால் குரு .. ஆசார்யாரிடமிருந்து அத்யயனம் ஆரம்பிக்கப்படுகிறது .. எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் இன்று வேதமாதாவையும் .. ஹயக்ரீவரையும் .. வியாஸரையும் வணங்கி சகல வித்யைகளும் .. ஞானமும் அருளவேண்டுவோமாக ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment