PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY INDEPENDENCE DAY AND A BLESSED PRADOSHAM TOO .. MAY LORD SHIVA FULFILL ALL YOUR DESIRES & ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
சுதந்திரதின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. திங்கட்கிழமையும் .. சோமவார விரதமும் .. மாலையில் திரயோதசித் திதியும் வருவதால் பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழவும் .. நல்லாரோக்கியமும் பெற்று மனதில் அமைதி
நிலவிடவும் ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது .. மற்றபிரதோஷ
நாட்களைவிட சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு .. இந்தநாளில் நாள்முழுவதும் சிவநாமம் ஜெபித்து
மாலை வேளையில் ஆலயதரிசனம் செய்வது சிறப்பு .. 

சாகாவரம் பெறுவதற்காக அமிர்தம்வேண்டி தேவர்களும் 
அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது .. வலிதாங்காத வாசுகிபாம்பு விஷத்தைக்கக்கியது அச்சமயத்தில் கடலில் இருந்தும் விஷம்பொங்கியது .. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ’ காலம் ’ என்ற நீலவிஷமும் .. பாற்கடலில் பிறந்த ‘ ஆலம் ‘ என்கிற கருப்புவிஷமும் சேர்ந்து கருப்புப்புயல்போல் கொடிய வெப்பமும் .. கடும் புகையும் 
கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது .. 

விஷத்தைக்கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர் .. அப்பொழுது ஈசன் தன்நிழலில் இருந்து தோன்றியவரும் .. பேரழகருமாகிய
சுந்தரரை அனுப்பி அவ்விஷத்தைக் கொண்டுவரும்படி கட்டளையிட .. சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும் கொடிய ஆலகாலவிஷத்தை ஒருதுளியாக கொண்டுவந்தார் .. 

அந்த ஆலகால விஷத்தை ஒருகணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான் .. இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்புவரும் என்று கருதிய பார்வதிதேவி விஷம் முழுவதும் ஈசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தார் .. அன்றுமுதல் ஈசன் திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார் .. 

ஏகாதசியன்று விஷமுண்ட பெருமான் துவாதசிமுழுவதும் பள்ளிகொண்டநிலையில் இருந்து திரயோதசிநாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலைவேளையில் எழுந்து ( 4.30 - 6.00 மாலை ) உமையவளை ஒருபக்கம் கொண்டு சூலத்தை கழற்றி மருகத்தை ஒலித்து .. ‘ சந்தியாநிருத்தம் ‘ எனும் நடனம் ஆடினார் .. இந்நாட்டியத்தைக்கண்ட தேவர்கள் 
“ ஹரஹர “ என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பினர் .. 

துன்பங்களைப்போக்கி இன்பங்களைத் தரும் இந்தப்புனிதமான பிரதோஷவேளையில் ஈசனையும் .. நந்தீஸ்வரரையும் வழிபாடு செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment