PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 'MAA' GAYATRI DEVI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE AND LEAD ALONG THE RIGHTEOUS PATH & REMOVE ALL YOUR PAINS AND SORROWS TOO .. " JAI MATA DI " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை காயத்ரிதேவியைத் துதித்து அன்னைக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து தங்கள் மனதில் குடியிருக்கும் பயம் .. கஷ்டங்கள் யாவும் நீங்கி வாழ்நாள் முழுவதும் ஆனந்தமும் .. அமைதியும் தங்களனைவருக்கும் கிட்டுவதாக .. 

ஓம் பூர்புவஸ்ஸுவ !
தத்ஸவிதுர் வரேண்யம் ! 
பர்கோ தேவஸ்ய தீமஹி !
தியோயோன ப்ரசோதயாத் !! 

பொருள் - 
எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச்செய்கிறாரோ!
அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக !! 

ஓவ்வோர் ஆண்டும் ” ஆவணி அவிட்டத்திற்கு “ மறுநாள் காயத்ரி ஜெபம் வருகின்றது இன்றைய நாளில் 1008 முறை காயத்ரிமந்திரம் ஜெபிக்கவேண்டுமென்பது மரபு அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல்லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும் 

தானத்தில் சிறந்தது அன்னதானம் .. திதிகளில் சிறந்தது துவாதசி .. மாதங்களில் சிறந்தது மார்கழி ,, அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி என்பார்கள் .. கிருஷ்ணபரமாத்வாவும் கீதையில் “ மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் “ என்கிறார் .. 

கௌசிகன் எனும் மன்னன் தன் தவப்பயனாகப் பிரம்மரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் .. இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர் .. 
பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம் .. இதை
” பிரம்ம தேஜோ பலம் பலம் “ எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் .. மஹிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்திரத்தின் அதிதேவதை காயத்ரிதேவி ! 

ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்த்ல் ஒரு யாகத்தைத் தொடங்கினார் .. அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிதேவி வராததால் நான்முகன் தனது சக்தியால் ஸ்ரீகாயத்ரிதேவியை சிருஷ்டித்தார் .. காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள் .. பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் 
என்று புராணங்கள் கூறுகின்றன .. 

இந்ததேவி செம்பருத்திபூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள் .. செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும் பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள் .. தன்பத்து கைகளில் வரஹஸ்தம் .. அபயஹஸ்தம் .. அங்குசம் சாட்டை .. ( உட்புறமும் .. வெளிப்புறமும் உள்ள தீய சக்திகளை நீக்குவது ) 
கபாலம் ( சிவதத்துவம் ) கதை ( விஷ்ணு ) சங்கு சக்கரம் இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள் நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள்
என சாஸ்திரங்கள் போற்றுகின்றன .. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திழ்கிறது .. 

காயத்ரி என்கிற பதம் காய்+த்ரீஎனப்பிரிந்து பொருள்தரும்
அதாவது “ காய் “ என்றால் அதாவது “ காய் “ என்ற கானத்திற்கு உரியது .. பாடப்பெறுவது எனப்பொருள் கொள்ளலாம் .. 

” த்ரீ “ என்பது “ த்ராயதே “ என்று விரிந்து “ காப்பாற்று “ எனப்பொருள்படும் .. அன்னை காயத்ரி தனது அபயகரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள் ..

கா+ய+த்ரீ .. கா - என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப்
புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது இதற்கு அதிபதி பிரம்மன் ..
ய -என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக்குறிப்பது .. 
இதற்கு அதிதேவதை விஷ்ணு..
ஆ - என்பது காரணதேகம் .. இதன் அதிபதி ருத்ரர் .. 
த்ரீ - எனும் பதம் இம்மூவரும்சேர்ந்து நம்மைக்காப்பாற்றியருள்வர் என்பதைக்குறிக்கும் .. 
எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரிமந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம் .. 

அன்னை காயத்ரிதேவியைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றிபெறுவோமாக ! 
“ “ ஜெய்ஸ்ரீ காயத்ரி தேவியே நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment