PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...




GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE NEW MOON DAY " AADI AMAAVAASAI " .. MAJORITY OF YOUR THOUGHTS CAME FROM YOUR ANCESTORS .. IT'S AN AUSPICIOUS TIME FOR ANCESTRAL RITUALS FOR BRINGING RELIEF TO YOUR ANCESTORS' SOUL .. SO YOU CAN HAVE BETTER OVER ALL LUCK IN LIFE .. " JAI PITHURU DEVO BAWA " ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மூன்றாம் ஆடிச் செவ்வாயும் .. ஆடிஅமாவாசையும் .. ஆடிப்பெருக்கும் ஒன்றாக வருவது அதிவிசேஷமாகும் .. அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்தித்து தாங்கள் வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறவும் என்றும் வாழ்வில் வசந்தம் வீசிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
வானவியல் கணிப்பின்படி சூரியனும் .. சந்திரனும் ஒரேராசியில் இணையும் காலமே அமாவாசையாகும் .. சூரியனைப் “ பிதுர்காரகன் “ என்றும் .. சந்திரனை 
“ மாதுர்காரகன் “ என்றும் அழைக்கின்றோம் .. இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகிய இன்று முன்னோரையும் .. மறைந்த நம் தாய் தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது .. புண்ணிய நதிகள் .. கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு .. சிறப்பு பூஜைகள் செய்வது .. ஏழைகள் .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அன்னதானம்
வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள் .. கர்மவினைகள் .. தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது நம்பிக்கை ..
இத்தகைய வழிபாடுகளால் முன்னோர்கள் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கும் முக்திகிட்டும் .. அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம் .. நாமும் இந்த புனிதமான நன்னாளில் முன்னோரை நினைந்து 
அவர்களது ஆசியையும் பெறுவோமாக ! 
“ ஓம் பித்ருதேவோ பவ “
இன்று ஆடிபதினெட்டாம் பெருக்கு .. ஆடிப்பெருக்காகும் ..
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் .. 
18 என்ற எண் “ ஜெயத்தை “ அதாவது வெற்றியைக் குறிக்கும் ..
சித்தர்கள் - 18 
பகவத்கீதையில் - 18 அத்தியாயங்கள் 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் - 18 படிகள் 
நெல்முதலான தானியங்கள் - 18 எனப் பலவும் அந்த அடிப்படையிலேயேஅமைந்தன .. அதை அனுசரித்துத்தான் நீர்பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் 18 படிகள் அமைத்தார்கள் .. உடலுக்கும் 
உள்ளத்துக்கும் ஆரோக்கிய்ம் தரும் காவிரி அன்னைக்கு 
“ ஆடி பதினெட்டு “ என்று விழாவும் எடுத்தார்கள் ..
ஆடி பதினெட்டு விழாவில் பெண்களே அதிகமாகப் பங்கேற்பார்கள் .. பத்து நாட்களுக்கு முன்னதாகவே நவதானியங்களை ஒருதட்டில் தூவி .. அத்துடன் சிறிதளவு மண்ணோ .. எருவோ கலந்து தண்ணீரும் தெளித்து வைப்பார்கள் .. விழாவுக்குள் அது முளைத்து வளர்ந்து இருக்கும் ..
அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள் 
ஆடிபதினெட்டு அன்று பிற்பகல் நேரத்தில் முளைப்பாலிகையைக் கையில் ஏந்தியபடி பெண்கள் ஆற்றாங்கரைக்குச் செல்வார்கள் .. போகும் வழியில் சிலமுக்கியமான இடங்களில் முளைப்பாலிகைகளைத் தரையில் வைத்துவிட்டு பெண்கள் எல்லோரும் வட்டமாக நின்று கும்மி அடிப்பார்கள் .. இப்படி ஊர்வலமாகக் கிளம்பிய பெண்கள் ஆற்றங்கரையை அடைய மூன்றுமணி நேரமாகும் .. ஆற்றங்கரையில் சுத்தமான ஓரிடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார்பிடித்து வைத்து அதன்முன்னால் முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள் .. பிறகு
ஒருபாத்திரத்தில் சர்க்கரை .. பச்சரிசி ஆகியவற்றைபோட்டுத் தண்ணீரை ஊற்றிக்கலந்து பிள்ளையார் முன்னால் வைப்பார்கள் ..
அவரவர் பிரார்த்தனை செய்து சூடம் ஏற்றி வணங்கிய பின் முதியசுமங்கலி ஒருவர் மஞ்சள் தடவிய நூல் சரடைத் தருவார் .. சிலர் அதைக் கழுத்திலும் .. சிலர் கையிலும் கட்டிக்கொள்வார்கள் .. அதன்பிறகு பெண்கள் எல்லோரும் அவரவர் தாம் கொண்டுவந்த முளைப்பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள் ..
சிறு கறுப்புமணிகளால் ஆன கருகமணி .. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச்சுற்றிச் செய்யப்பட்ட காதோலை .. ஆகியவற்றையும் ஆற்றில்விடுவார்கள் .. 
நுரைபொங்கப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வருகையால் பயிர் .. பச்சைகள் எல்லாம் முளைவிட்டுத் தழைக்கப்போகின்றன .. அவள் இப்போது மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் அவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன .. 
அன்னையின் அருளால் சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்களாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment