அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையும் .. திருவாதிரையும் கூடிவரும் இந்நாளில்
சிவாலயம் சென்று சிவபெருமானையும் .. ஆடலரசனாகிய நடராஜப்பெருமானையும் வழிபடுவது சிறப்பு ... தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. தங்கள் வாழ்வில் ஆனந்தமும் .. நல்லாரோக்கியமும் என்றும் நிலவிட எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சித்ஸபேசாய வித்மஹே !
சிதாகாசாய தீமஹி !
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!
சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது
நடராஜர் வடிவமே ! இவர் ஆடுவது ஆனந்ததாண்டவம் ..
அம்பலவாணர் .. சபாபதி .. கூத்தப்பெருமான் .. நடேசன் ..
சித்சபேசன் .. நடராஜன் .. கனகசபாபதி .. பொன்னம்பலம்
என்ற பெயர்களும் உண்டு .. இலக்கியங்களில் ஆடல்வல்லான் என்று குறிப்பிட்டுள்ளனர் .. ஆனந்ததாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால் மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும் ..
நடராஜ உருவத்தின் தத்துவம் -
வலதுபுறமேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது
இந்த உலகம் ஒலியின்மூலம் துவங்கியது என்பதை காட்டுகிறது ..
இடதுபுறமேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்துவிடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது
வலதுபுறகீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதைப் போன்று .. பயப்படாதே ! நான் இருக்கிறேன் ! என்று கூறுகின்றது ..
இடதுபுறகீழ் கையால் உயர்த்தி இருக்கும் காலைக்காட்டி தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது ..
இந்த நடனத்தில் ஆக்கல் .. அழித்தல் .. காத்தல் .. என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துபோகின்றது ..
சிவபெருமான் அருவம் .. உருவம் .. அருவுருவம் என்னும் மூன்றுவடிவம் கொண்டவர் .. இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம் ..
மூலவர் திருமூலநாதர் அருவுருவத்திலும் (லிங்கம்)
நடராஜர் உருவத்திலும் .. சிதம்பர ரகசியம் என்னும் வெட்டவெளியில் உருவமற்ற அருவநிலையிலும் சுவாமி காட்சிதருகிறார் ..
சிதம்பரம் என்றால் என்ன ..? ..
சித் + அம்பரம் = சிதம்பரம் ..
சித் - அறிவு ..
அம்பரம் - வெட்டவெளி ..
நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒருவாயில் உள்ளது ..
இதனுள் தங்கத்தினாலான வில்வமாலை உள்ளது ..
வாசலில் திரைதொங்கும் .. பூஜையின்போது திரைவிலக்கப்பட்டு ஆரத்திகாட்டப்படும் .. அங்கே என்ன இருக்கிறது ? என்று குனிந்துபார்த்தால் ஆகாயம்தான் தெரியும் .. இறைவன் ஆகாயம்போல் பரந்து விரிந்தவன்
ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது .. முடிவும் கிடையாது .. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது .. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம் ..
சிதம்பரம் கோயிலை “ தில்லை அம்பலம் “ என்பர் .. தில்லைமரம் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லைவனம் எனபெயர் .. சிதம்பரத்திற்குக் கிழக்கேயுள்ள பிச்சாவரம் உப்பங்கழியோரத்தில் தில்லை மரங்கள் உள்ளன .. சேந்தனார் தம்முடைய பாடலில் “ மன்னுக தில்லை ! வளர்க நம்பக்தர்கள் ! “ என்று சிதம்பரத்தை “ தில்லை “ என்று குறிப்பிடுகிறார் ..
நாமும் தில்லை அம்பலவாணனைப் போற்றுவோம் !
சகலநலன்களையும் பெறுவோமாக !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ தென்னாடுடைய சிவனே ! போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி “ ஓம் நமசிவாய “

No comments:
Post a Comment